Advertisement
சைவம்

காரசாரமான ருசியில் பிரெட் சில்லி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!

Advertisement

பிரெட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரெட்டில் சுவையான ரெசிபிகளை உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை அசத்தலாம். சீன உணவுகள் இந்திய சுவையில் செய்து சாப்பிடும்போது அதன் ருசி அலாதியானது. ஃபிரைடு ரைஸ் தொடங்கி சில்லி சிக்கன் வரை எதுவும் நாவூற வைக்கும். அந்த வகையில் பிரெட் துண்டுகளை பயன்படுத்தி பிரெட் சில்லி செய்து பார்க்கலாம்.

விதவிதமான டிபன் வகைகள் செய்து கொடுத்தாலும், இந்த பிரட் ரெசிபிக்கு ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. இனிப்பும், காரமும் கலந்த இந்த பிரட் சில்லி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வண்ணம் அமைய இருக்கிறது. தினம் தினம் ஒரே மாதிரியான சாப்பாட்டை சாப்பிட்டு பழகி போகிவிட்டதா. அப்போது இந்த மாதிரியான ரெசிபியையும் செய்து சாப்பிட்டு பாருங்கள். பிரட் சில்லி பிரட், மசாலா வகைகள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான சிற்றுண்டி. இது காலை, மதியம், மற்றும் மாலை நேரங்களில் உணவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisement

குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுத்து அனுப்பலாம். இதனை 10 – 15 நிமிடங்களில் மிகவும் சுலபமான முறையில் செய்யலாம். மாலையில் பள்ளி முடித்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கும் மற்றும் அலுவல் பணி முடித்து வரும் பெரியவர்களுக்கும் வித்தியாசமாக என்ன ஸ்னாக்ஸ் செய்யலாம் என்று யோசிக்கும் போது , நீங்கள் இந்த ருசியான ஸ்நாக்ஸை தாராளமாக செய்து தரலாம்.இது குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் விருப்பமான ஸ்னாக்ஸ் ஆக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பிரெட் சில்லி | bread chilli recipe in tamil

Print Recipe
பிரெட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரெட்டில் சுவையான ரெசிபிகளை உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை அசத்தலாம். சீன உணவுகள் இந்திய சுவையில் செய்து சாப்பிடும்போது அதன் ருசி அலாதியானது.
Advertisement
ஃபிரைடு ரைஸ் தொடங்கி சில்லி சிக்கன் வரை எதுவும் நாவூற வைக்கும். அந்த வகையில் பிரெட் துண்டுகளை பயன்படுத்தி பிரெட் சில்லி செய்து பார்க்கலாம். விதவிதமான டிபன் வகைகள் செய்து கொடுத்தாலும், இந்த பிரட் ரெசிபிக்கு ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. இனிப்பும், காரமும் கலந்த இந்த பிரட் சில்லி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வண்ணம் அமைய இருக்கிறது.
Course Breakfast, dinner
Cuisine Indian
Keyword bread chilli
Advertisement
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 110

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Ingredients

  • 6 பிரெட் துண்டுகள்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 குடைமிளகாய்
  • 1 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் சோயா சாஸ்
  • 2 டீஸ்பூன் தக்காளி சாஸ்
  • 1/2 துண்டு இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பிரட் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம் மற்றும் குடைமிளகாயை பெரிய பெரிய துண்டுகளாக சதுரமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் ‌மற்றும் குடமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இவை சிறிது வதங்கியதும் இஞ்சி பூண்டை தட்டி சேர்த்துக் கொள்ளவும். பிறகு காஷ்மீர் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • மசாலா வாசனை போனவுடன் சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து கிளறி, இப்போது நாம் பொரித்து வைத்துள்ள பிரட் துண்டுகளை நன்கு கிளறி இரண்டு நிமிடங்கள் அப்படியே வைத்து விடவும்.
  • சிறிது நேரம் கழித்து கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான பிரெட் சில்லி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 110kcal | Carbohydrates: 2.2g | Protein: 5g | Fat: 1.5g | Sodium: 170mg | Potassium: 100mg | Fiber: 5g | Sugar: 2g | Calcium: 9mg | Iron: 3mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

1 மணி நேரம் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

20 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

23 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago