ருசியான கத்தரிக்காய் மோர் குழம்பு சுட சுட சோறுடன் சாப்பிட பக்காவான ஒரு குழம்பு இது!
மோர் குழம்பு தமிழகத்தில் பரவலாக செய்யப்படும் ஒரு விதமான குழம்பு. மோர் குழம்பை தமிழகத்திலேயே வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக மக்கள் செய்து சுவைக்கிறார்கள். சில பகுதிகளில் இதில் எந்த ஒரு காயையும் சேர்க்காமலும், சில பகுதிகளில் அவரவர் விருப்பத்திற்கேற்ப பூசணிக்காயையோ, வெள்ளரிக்கா
மோர் குழம்பு தமிழகத்தில் பரவலாக செய்யப்படும் ஒரு விதமான குழம்பு. மோர் குழம்பை தமிழகத்திலேயே வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக மக்கள் செய்து சுவைக்கிறார்கள். சில பகுதிகளில் இதில் எந்த ஒரு காயையும் சேர்க்காமலும், சில பகுதிகளில் அவரவர் விருப்பத்திற்கேற்ப பூசணிக்காயையோ, வெள்ளரிக்காயையோ, அல்லது வெண்டைக்காயையோ சேர்த்தும், மற்றும் சில பகுதிகளில் மிளகை சேர்த்தும் இந்த மோர் குழம்பை செய்கிறார்கள். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது கத்தரிக்காய் சேர்த்து செய்யப்படும் மோர் குழம்பு.
கத்தரிக்காயில் புளிக்குழம்பு வைப்பது போல் கத்தரிக்காய் மோர் குழம்பும் வைக்கலாம். காரம் பிடிக்காத பலருக்கும் பிடித்த குழம்பு மோர் குழம்பு. தேங்காய், சீரகம், பச்சைமிளகாய் வாசனை தான் இந்த குழம்போட ஹைலைட். அதுவும் தாளிக்க தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணா, கேட்கவே வேண்டாம். குழம்பு அப்படியே கல்யாண வீட்டுல சாப்பிடுற மாதிரியே இருக்கும். இதை தயார் செய்ய வெறும் 5 நிமிடம் போதும். மோர் குழம்பு செய்வதற்கு வெறும் தயிர் இருந்தால் போதும் இதை வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி நாம் செய்து விடலாம்.
மேலும் மற்ற குழம்புகளை போல இவை செய்வதற்கும் அதிக நேரம் பிடிக்காது. மிகவும் சுலபமான முறையில் செய்யப்படும் இந்த மோர் குழம்பு வெயில்காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க உதவும். இது உண்மையிலேயே அற்புதமாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் மோர் குழம்பு எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.