பார்த்தாலே நாவில் எச்சி ஊறும் ருசியான கத்தரிக்காய் தவா வறுவல் இப்படி செய்து பாருங்க!
காய்கறிகள் அனைத்துமே சத்து நிறைந்தவை . ஆனால் நம்மில் சிலருக்கு சில காய்கறிகள் பிடிக்காது. உணவின் போது ஒதுக்கி வைத்து விடுவோம் . அப்படி ஒதுக்கி வைக்கும் காய்கறிகளில் ஒன்று தான் கத்தரிக்காய். ஆனால் அப்படிப்பட்ட கத்திரிக்காயில் எத்தனை நன்மைகள் உண்டு தெரியுமா? இப்படி நன்மைகள் உள்ள கத
காய்கறிகள் அனைத்துமே சத்து நிறைந்தவை . ஆனால் நம்மில் சிலருக்கு சில காய்கறிகள் பிடிக்காது. உணவின் போது ஒதுக்கி வைத்து விடுவோம் . அப்படி ஒதுக்கி வைக்கும் காய்கறிகளில் ஒன்று தான் கத்தரிக்காய். ஆனால் அப்படிப்பட்ட கத்திரிக்காயில் எத்தனை நன்மைகள் உண்டு தெரியுமா? இப்படி நன்மைகள் உள்ள கத்திரிக்காயை ஒதுக்கி வைக்கக் கூடாது .
கத்திரிக்காயில் நீர்ச்சத்து,நார்ச்சத்து அதிகமாக உள்ளது . கத்தரிக்காயில் விட்டமின் சி சத்தும் , இரும்பு சத்தும் அதிகமாக இருக்கிறது ஆகையால் தான் கத்தரிக்காயை வெட்டி வைத்த பிறகு உடனே நிறம் மாறிவிடுகிறது . அதற்கு காரணம் காற்றில் உள்ள ஆக்சிஜனில் இரும்பு சத்து ஆக்சனேற்றம் அடைவது தான் . இப்படிப்பட்ட கத்திரிக்காயை நரம்பு மண்டலத்தை வலுவூட்டுகிறது. சளி இருமலை குறைகிறது. கொழுப்பை கரைக்கிறது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. தூக்கமின்மையை சரி செய்கிறது.நினைவாற்றலை அதிகரிக்கிறது.
கத்திரிக்காயில் பலவிதமாக சுவைத்திருப்போம். கத்தரிக்காய் சாம்பார் ,புளி குழம்பு, கத்தரிக்காய் வறுவல் ,எண்ணெய் கத்திரிக்காய் , கத்திரிக்காய் தொக்கு இப்படி பல வகைகள் உண்டு. இப்பொழுது நாம் பார்க்க இருப்பது சுவையான கம கம என்று மணக்க கூடிய கத்திரிக்காய் தவா வறுவல் இது வட இந்தியாவில்அதிகம் செய்து உண்ணும் ஒரு உணவாகும். இதில் பெரிய நீல நிற கத்திரிக்காயை உபயோகிப்போம்.
இந்தக் கத்திரிக்காய் தவா ஃப்ரைக்கு முக்கியமான விஷயம் நம்ம செய்யப் போகும் மசாலா பொடி . அந்த மசாலா பொடியை சரியா செய்தால் மட்டும் தான் இந்த கத்திரிக்காய் நல்ல சுவையாக வரும். மசாலா எப்படி ரெடி பண்றது எப்படி தவாவில் வச்சு பிரை பண்றது எல்லாம் பார்க்கலாம். இந்த தவாஃ ப்ரை செஞ்சு அசத்த போறோம்.சரி எப்படி கத்திரிக்காய் தவா ப்ரை செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம் வாங்க.