ருசியான அவரைக்காய் பொரியல் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! சுட சுட சோறுடன் சாப்பிட ருசியாக இருக்கும்!
ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சமையல் முறைகள் பின்பற்றப்படுகின்றன. சமையல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் காய்கறிகள், மசாலா பொருட்கள் அனைத்தும் எல்லோரது வீட்டிலும் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் சமையலின் ருசி மட்டும் வெவ்வேறாக இருக்கிறது. இதற்கு காரணம் ஒவ்வொருவரின் கைப்பக்குவம் ம
ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சமையல் முறைகள் பின்பற்றப்படுகின்றன. சமையல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் காய்கறிகள், மசாலா பொருட்கள் அனைத்தும் எல்லோரது வீட்டிலும் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் சமையலின் ருசி மட்டும் வெவ்வேறாக இருக்கிறது. இதற்கு காரணம் ஒவ்வொருவரின் கைப்பக்குவம் மற்றும் அவர்கள் செய்யும் உணவில் சேர்க்கப்படும் மசாலாக்களும் அதன் அளவுகளுமாகும்.
ஒரு சிலருக்கு எப்போதும் அதிக காரம் சாப்பிடுவார்கள். ஒரு சிலர் எந்த உணவிலும் காரத்தை தவிர்ப்பார்கள். ஒரு சிலர் தேங்காய் சேர்த்து மட்டுமே உணவு சமைப்பார்கள், தேங்காய் இல்லாமல் எந்த உணவும் இருக்காது. இப்படி பலவிதமான உணவுகளை சமைக்கின்றனர்.
காய்கறிகளில் எப்பொழுதும் காரம் குறைவாக இருந்தால் தான் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். அப்படி குறைவான காரத்தில் மிகவும் சுவையாக செய்யப்படும் அவரைக்காய் பொரியலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.அவரைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் இதய நோய்களில் இருந்து நம்மை காக்கிறது. அவரைப் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து, கண் நரம்புகள் குளிர்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும்.ஆகையால் ஆரோக்கியம் நிறைந்த இந்த அவரைக்காய் பொரியல் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.