புதனும் சூரியனும் இணைவதால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்!
நவகிரகங்களில் ராஜாவாக கருதப்படுபவர், சூரிய பகவான். இவர் தன்னம்பிக்கை, ஆற்றல், சகிப்புத்தன்மை ஆகியவற்றின் ஆதாரமாக இருக்கிறார். அதேபோல், நல்ல புத்தி, நன்கு பேசும் திறன், படிப்பு ஆகியவற்றின் ஆதாரமாகத் திகழ்கிறார், புதன் பகவான். இத்தகைய குணங்களைக் கொண்ட புதனும் சூரியனும் இணைந்து உருவ
நவகிரகங்களில் ராஜாவாக கருதப்படுபவர், சூரிய பகவான். இவர் தன்னம்பிக்கை, ஆற்றல், சகிப்புத்தன்மை ஆகியவற்றின் ஆதாரமாக இருக்கிறார். அதேபோல், நல்ல புத்தி, நன்கு பேசும் திறன், படிப்பு ஆகியவற்றின் ஆதாரமாகத் திகழ்கிறார், புதன் பகவான். இத்தகைய குணங்களைக் கொண்ட புதனும் சூரியனும் இணைந்து உருவாக்கும் யோகம், ’’புதாத்திய ராஜயோகம்’’ எனப்படுகிறது. இதில், சூரியனை – ஆதித்யா என்றும் குறிப்பிடுவர். இந்தப் புதாத்திய ராஜயோகத்தைப் பெறும் ராசிகளுக்கு மக்களிடையே செல்வாக்கு, பொதுவெளியில் மரியாதை, நிதி ஆகியவை செழிக்கும்.
அரிய யோகம்
ஜோதிட உலகில் பிரமாண்டமாக பேசப்படும் யோகத்தில் ஒன்று புத ஆதித்திய யோகம். பல விதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் சூரியன் மற்றும் புதன் இணைவினால் உருவாகும் இந்த யோகம் பலருக்கு கல்வியில், தொழிலில், உத்தியோகத்தில் பொருளாதாரத்தில் மிகப் பெரிய திருப்பு முனையைத் தந்து உள்ளது.
வெற்றி
ஜாதகத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால், புத ஆதித்ய யோக அடிப்படையில் ஜாதகர் கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவார். பிறந்த ஜாதகத்தில் புத்தாதித்ய யோகம் இயல்பாகவே உள்ளவர்கள் மற்றவர்களை விட வாழ்க்கையில் அதிக வெற்றியைப் பெறுவார்கள். புதன் அதிபதியாக இருக்கும் மிதுனம், கன்னி லக்னங்களில் பிறந்தவர்கள் கணிப்புத் திறனுக்கு பெயர் போனவர்களாகவும், அடுத்தவர்கள் எந்தச் சமயத்தில், எப்படிச் செயல்படுவார்கள் என்பதை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் அறிவாளிகளாகவும் இருப்பார்கள்.
சூரியன் மற்றும் புதன்
நவக்கிரகங்களில் ஒருவரான புதன், ஒரு வகைக்கு இரட்டை நிலை கொண்ட கிரகமாவார். புதன் ராசிநாதனாக இருக்கும் மிதுன ராசியில் இருக்கும் இரட்டையர் குறியீடு இதைத்தான் குறிப்பிடுகிறது. புதனுக்கு ஒரு தனிச்சிறப்பும் உண்டு. அவர் தனித்திருக்கும் நிலையில் சுபராக இருப்பார். பிறருடன் இணையும் போது, அவர் சேரும் கிரகம் சுபராக இருந்தால் தன்னைச் சுபராகவும், அந்தக் கிரகம் பாபராக இருந்தால் தன்னை பாபராகவும் நிலைமாற்றிக் கொள்வார். அதனால் ஜாதகத்தில் சூரியன் மற்றும் புதன் இரு கிரகங்களுமே சுப ஸ்தானத்தில் இருப்பது அவசியம்; இரண்டில் ஏதேனும் ஒன்று அசுப நிலையில் இருந்தால், புதாதித்ய யோகம் முழு பலனைத் தராது.
திரிகோண வீடு
எந்த கிரகமாக இருந்தாலும் திரி கோண ஸ்தனத்திலோ, கேந்திரத்திலோ இருப்பின் அந்த கிரகம் மிக பலமாக இருக்கிறது என்று பொருள். அதோடு அந்த கிரகம் கொடுக்கக்கூடிய பொருள் மிக சிறப்பாக இருக்கும். புத்தாதித்ய யோகம் ஜாதகத்தின் மையம் மற்றும் திரிகோண வீடுகளில் அமைய வேண்டும், அங்கு அவை மங்களகரமானதாகக் கருதப்படுகின்றன.
சுப வீடு
புதாதித்ய யோகம் சுப வீடுகளில் இருந்தாலும், சூரியன் மற்றும் புதன் அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்று பலவீனமாக இருந்தால், இந்த யோகம் முற்றிலும் சுபமானதாக இருக்காது.
பலன்கள்
சில நேரங்களில் தோஷங்களே யோகங்களாக மாறுகின்றன. அப்படித்தான் சூரியனோடு சேர்ந்த புதன் அஸ்தங்க தோஷத்தை அடையாமல் புத ஆதித்ய யோகத்தை பெறுகிறது. இந்த கால கட்டத்தில் குறிப்பிட்ட ராசிகளுக்கு ரத்த சம்பந்தப்பட்ட உடல்நிலை பாதிப்புகள் தீரும். கல்வி தடை நீங்கும். பணப் பிரச்சினை, வாழ்வில் முன்னேற்றமற்ற நிலை அனைத்தும் நீங்கும். இந்த யோகம் அமைந்தவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு, பல கலைகளை கற்றுத் தேறும் வாய்ப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் ஆகியவை உண்டாகும்.
இதனையும் படியுங்கள் : கோடீஸ்வர யோகத்தை பெறுவதற்கு வீட்டில் இருக்க வேண்டிய ஏழு சிலைகள்