ஒவன் இருந்தால் போதும் ஈஸியாக பட்டர் பிஸ்கட் வீட்டிலயே செஞ்சி சாப்பிடலாம்! எவ்வளவு கொடுத்தாலும் காலி பண்ணிடுவாங்க!

குக்கீஸ் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவைாயானது. இவை க்ரன்ச்சி குக்கியாக மட்டுமில்லாமல் மிகவும் மிருதுவான, மற்றும் வாயில் போட்டால் எளிதில் கரையும் தன்மையை கொண்டுள்ள ஒரு அருமையான குக்கியாகும். வெண்ணிலா எசன்ஸ் மற்றும் சாக்லேட

By Prem Kumar · 12/2/2024

குக்கீஸ் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவைாயானது. இவை க்ரன்ச்சி குக்கியாக மட்டுமில்லாமல் மிகவும் மிருதுவான, மற்றும் வாயில் போட்டால் எளிதில் கரையும் தன்மையை கொண்டுள்ள ஒரு அருமையான குக்கியாகும். வெண்ணிலா எசன்ஸ் மற்றும் சாக்லேட் அருமையாக இணைந்து தரும் சுவை அலாதியாக இருக்கும். அது மட்டுமன்றி அனைவராலும் மிகவும் விரும்பப்படும் ஒரு உணவு ஆகும. பேக்கரியில் செய்யப்படும் குக்கீஸ்களை விட வீட்டில் தயாரிக்கப்பட்ட குக்கீஸ்களை யார் தான் விரும்ப மாட்டார்கள்? பொதுவாக மக்கள் குக்கீஸ்களை அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஆனால் நீங்கள் அவற்றை வீட்டிலேயே செய்ய கற்றுக்கொண்டால், பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

இது தயாரிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். குக்கீஸ்களை வீட்டில் செய்வது மிகவும் எளிதானது. இதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸில் வைத்து அனுப்பினால், கொஞ்சம் கூட மிச்சசம் இல்லாமல் சாப்பிட்டு இருப்பார்கள். பிஸ்கேட், குக்கீஸ் ஆகியவற்றை நாம் பெரும்பாலும் வெளியில் கடைகளில் சென்று தான் வாங்கி சுவைத்து இருப்போம். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான பட்டர் குக்கீஸை வீட்டில் சுலபமாகவும், சுவையாகவும் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து தெரிந்து கொள்ளலாம்.

இதனையும் படியுங்கள் : ருசியான ஸ்நாக்ஸ் சாப்பிட மொறு மொறு குக்கீஸ் இப்படி செய்து பாருங்க! டீ, காபியுடன் சாப்பிட பக்காவாக இருக்கும்!

Recipes AMP · Quick view
View full