பேக்கரியில் செய்யப்படும் குக்கீஸ்களை விட வீட்டில் தயாரிக்கப்பட்ட குக்கீஸ்களை யார் தான் விரும்ப மாட்டார்கள்? பொதுவாக மக்கள் குக்கீஸ்களை அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஆனால் நீங்கள் அவற்றை வீட்டிலேயே செய்ய கற்றுக்கொண்டால், பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி,ஆரோக்கியமானதாகவும் இருக்கும். அதற்கு அவன்(Oven) இருந்தால் போதும். இது தயாரிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். குக்கீஸ்களை வீட்டில் செய்வது மிகவும் எளிதானது. கேரட் வைத்து செய்யப்படும் இந்த குக்கீஸ்களை குழந்தைகள் அல்லது பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்புவார்கள்.. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
-விளம்பரம்-
கேரட் குக்கீஸ் | Carrot Cookies Recipe In Tamil
பேக்கரியில்செய்யப்படும் குக்கீஸ்களை விட வீட்டில் தயாரிக்கப்பட்டகுக்கீஸ்களை யார் தான் விரும்ப மாட்டார்கள்? குக்கீஸ்கள் தேநீர் அல்லது காபியுடன் நன்றாகஇருக்கும். பொதுவாக மக்கள் குக்கீஸ்களை அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஆனால் நீங்கள்அவற்றை வீட்டிலேயே செய்ய கற்றுக்கொண்டால் .இதனால் பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, ஆரோக்கியமானதாகவும் இருக்கும். அதற்கு அவன் இருந்தால் போதும். இது தயாரிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.குக்கீஸ்களை வீட்டில் செய்வது மிகவும் எளிதானது. கேரட் வைத்து செய்யப்படும் இந்த குக்கீஸ்களை குழந்தைகள் அல்லது பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்புவார்கள்.. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Yield: 5
Calories: 35kcal
Equipment
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் கோதுமை மாவு
- 5 கேரட்
- 1 டேபிள்ஸ்பூன் பேக்கிங் பவுடர்
- 2 கப் சர்க்கரை
- 2 கப் வெண்ணெய்
- 2 கப் மைதா
- 1 முட்டை
- 1 டேபிள்ஸ்பூன் வெனிலா
- 8 உலர்ந்த திராட்கை
- 8 முந்திரி
- உப்பு தேவையான அளவு
- நெய் தேவையானஅளவு
செய்முறை
- கேரட்டை நன்றாக அவித்து, மசித்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரையையும் வெண்ணெயையும் நன்றாக கடைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் கேரட் மசியலை சேர்க்கவும்.
- மைதா,பேக்கிங் பவுடர், உப்பு இவற்றை நன்றாக சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை கேரட் கலவையுடன் கலந்து நன்றாக கடைய வேண்டும். தேவையானால் சிறிது எஸ்சென்ஸ் சேர்த்து கொள்ளலாம்.
- பின்னர் இந்த கலவையை சிறிய டப்பாக்களிலோ அல்லது பெரிய தட்டிலோ நெய் தடவி, சிறிது இடைவெளி விட்டு ஊாற்ற வேண்டும். அதன் மேற்பரப்பின் முந்திரி, திராட்சை, கிஸ்மிஸ் போன்றவற்றை தூவலாம்.
- இதனை 10 முதல் 15 நிமிடம் வரை ஓவனில் வைத்து பேக் பண்ணவும். பின் வெளியில் எடுத்து சிறிது நேரம் ஆறிய பின் பரிமாறலாம்.
Nutrition
Serving: 100g | Calories: 35kcal | Carbohydrates: 8.22g | Protein: 0.76g | Fat: 0.18g | Sodium: 56mg | Potassium: 235mg | Fiber: 3g | Calcium: 31mg | Iron: 0.34mg