குக்கீஸ் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவைாயானது. இவை க்ரன்ச்சி குக்கியாக மட்டுமில்லாமல் மிகவும் மிருதுவான, மற்றும் வாயில் போட்டால் எளிதில் கரையும் தன்மையை கொண்டுள்ள ஒரு அருமையான குக்கியாகும். வெண்ணிலா எசன்ஸ் மற்றும் சாக்லேட் அருமையாக இணைந்து தரும் சுவை அலாதியாக இருக்கும். அது மட்டுமன்றி அனைவராலும் மிகவும் விரும்பப்படும் ஒரு உணவு ஆகும. பேக்கரியில் செய்யப்படும் குக்கீஸ்களை விட வீட்டில் தயாரிக்கப்பட்ட குக்கீஸ்களை யார் தான் விரும்ப மாட்டார்கள்? பொதுவாக மக்கள் குக்கீஸ்களை அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஆனால் நீங்கள் அவற்றை வீட்டிலேயே செய்ய கற்றுக்கொண்டால், பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி, ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
இது தயாரிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். குக்கீஸ்களை வீட்டில் செய்வது மிகவும் எளிதானது. இதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸில் வைத்து அனுப்பினால், கொஞ்சம் கூட மிச்சசம் இல்லாமல் சாப்பிட்டு இருப்பார்கள். பிஸ்கேட், குக்கீஸ் ஆகியவற்றை நாம் பெரும்பாலும் வெளியில் கடைகளில் சென்று தான் வாங்கி சுவைத்து இருப்போம். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான பட்டர் குக்கீஸை வீட்டில் சுலபமாகவும், சுவையாகவும் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து தெரிந்து கொள்ளலாம்.
பட்டர் குக்கீஸ் | Butter Cookies Recipe In Tamil
Equipment
- 1 ஓவன்
- 1 பவுள்
- 1 பீட்டர்
தேவையான பொருட்கள்
- 100 கி பட்டர்
- 3/4 கப் மைதா மாவு
- 1/4 கப் சோள மாவு
- 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
- 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
- 4 டேபிள் ஸ்பூன் பால்
- 1/4 கப் பொடித்த சர்க்கரை
- 1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
- சாக்கோ சிப்ஸ் தேவையான அளவு
செய்முறை
- முதலில் வெண்ணெயை ஒரு பவுளில் போட்டு பீட்டர் வைத்து 2 நிமிடங்களுக்கு பீட் செய்து கொள்ளவும்.
- பின் அதனுடன் சர்க்கரை மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து மென்மையாக வரும் வரை பீட் செய்து கொள்ளவும்.
- பின் மைதா மற்றும் சோள மாவை ஒரு பாத்திரத்தில் சலித்து வெண்ணெயுடன் சேர்த்து நன்கு கலந்து விட்டு பின் பீட்டர் வைத்து பீட் செய்யவும்.
- அதன்பிறகு பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, பால் சேர்த்து நன்கு கலந்து கரண்டியில் இருந்து கீழே விழாத அளவுக்கு பீட் செய்து கொள்ளவும்.
- பின் பைபிங் பேக்கில் பீட் செய்த மாவை அடைத்து விரும்பிய வடிவில் செய்து அதில் சாக்கோ சிப்ஸ் சேர்த்து அலங்கரிக்கவும்.
- பின் குக்கீஸ் வேக வைக்கும் தட்டில் பட்டர் பேப்பர் போட்டு அதன் மேல் சிறிதளவு வெண்ணெய் தடவி குக்கீஸை வைக்கவும்.
- அதன்பிறகு 10 நிமிடங்கள் ஓவனை சூடாக்கிக் கொள்ளவும். பிறகு ஓவனில் குக்கியை வைத்து 20 முதல் 25 நிமிடங்கள் குக்கீஸ் வெந்ததும் ஓவனில் இருந்து வெளியில் எடுத்து ஆற விடவும்.
- அவ்வளவுதான் சுவையான, மிருதுவான பட்டர் குக்கீஸ் தயார். மாலை வேளையில் தேநீருடன் இதனை பரிமாறி மகிழலாம்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான ஸ்நாக்ஸ் சாப்பிட மொறு மொறு குக்கீஸ் இப்படி செய்து பாருங்க! டீ, காபியுடன் சாப்பிட பக்காவாக இருக்கும்!