முட்டைகோஸ் பயத்தம்பருப்பு கூட்டு ஹோட்டல் ஸ்டைலில் நம் வீட்டிலயே ஈஸியாக செய்யலாம்!
நிறைய பேருக்கு முட்டைக்கோசை வைத்து பொரியல் செய்து கொடுத்தால் பிடிக்காது. முட்டைக்கோஸ் என்றாலே நிறைய பேருக்கு பிடிக்காமல் போவதற்கு காரணம் அது வேகும் போது வரக்கூடிய வாடை தான். சமைத்து முடித்த பின்பும், சில சமயம் அதில் ஒரு மாதிரியான வாடை வீசும். இது சில பேருக்கு சுத்தமாக பிடிக்காது.
நிறைய பேருக்கு முட்டைக்கோசை வைத்து பொரியல் செய்து கொடுத்தால் பிடிக்காது. முட்டைக்கோஸ் என்றாலே நிறைய பேருக்கு பிடிக்காமல் போவதற்கு காரணம் அது வேகும் போது வரக்கூடிய வாடை தான். சமைத்து முடித்த பின்பும், சில சமயம் அதில் ஒரு மாதிரியான வாடை வீசும். இது சில பேருக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனால் முட்டைக்கோசை வைத்து முட்டைகோஸ் பயத்தம்பருப்பு கூட்டு செய்தால் எந்த வாசமும் வீசாது. அட்டகாசமான சுவையில் இருக்கும்.
சாதத்துக்கு தொட்டுக்க மட்டுமல்ல, சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவதற்கும் ரொம்பவே சுவையாக இருக்கும் இந்த முட்டைகோஸ் பயத்தம்பருப்பு கூட்டு செய்வதற்கு அதிக நேரம் கூட எடுப்பதில்லை. அதிக சத்துக்கள் உள்ள முட்டைகோஸ் கூட்டு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் தணியும். சுவையான முட்டைகோஸ் கூட்டு கமகமக்கும் மணத்துடன் எளிதாக எப்படி செய்வது? என்பது தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.