Advertisement
சைவம்

ருசியான முட்டைகோஸ் சாதம் ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்களேன்! ஒரு தட்டு சாதமும் காலியாகும்!

Advertisement

பொதுவாக முட்டைக்கோஸ் சாதம் என்றால் பலருக்கும் ஹோட்டலில் சாப்பிடதான் பிடிக்கும். ஏனென்றால் அதன் சுவையே தனி. வீட்டில் செய்தால் அந்த அளவுக்கு அதை பக்குவமாக செய்யமாட்டார்கள்.ஆனால், இப்பதிவில் ஹோட்டல் சுவையில் முட்டைக்கோஸ் சாதம் எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். நிறைய பேருக்கு முட்டைக்கோசை வைத்து பொரியல் செய்து கொடுத்தால் பிடிக்காது.

முட்டைக்கோஸ் என்றாலே நிறைய பேருக்கு பிடிக்காமல் போவதற்கு காரணம் அது வேகும் போது வரக்கூடிய வாசம் தான். சமைத்து முடித்த பின்பும், சில சமயம் அதில் ஒரு மாதிரியான வாடை வீசும். இது சில பேருக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனால் முட்டைக்கோசை வைத்து இந்த கலவை சாதத்தை செய்தால் எந்த வாசமும் வராது. அட்டகாசமான சுவையில் இருக்கும். முட்டைக்கோஸ் சாதம் ஒரு எளிதான, விரைவான மற்றும் சுவையான மதிய உணவுப்பெட்டி செய்முறையாகும், இது அரிசியை ஊறவைத்தால் வெறும் 20 நிமிடங்களில் செய்யலாம்.

Advertisement

பாசுமதி அரிசி மற்றும் இத்தாலிய மூலிகைகளின் கலவையானது, இதன் சுவையை உயர்த்துகிறது மற்றும் உணவக பாணியில் ஃப்ரைட் ரைஸ் சுவையை அளிக்கிறது , ஆனால் எந்த சாஸ்களும் இல்லாமல் இந்த மிதமான மசாலா சாதம் அடிமையாக்கும் சுவைகளுடன் குழந்தைகளை கவர்கிறது.  முட்டைகோஸில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். இன்று முட்டைகோஸ் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

முட்டைகோஸ் சாதம் | Cabbage Rice Recipe In Tamil

Print Recipe
அட்டகாசமான சுவையில் இருக்கும். முட்டைக்கோஸ் சாதம் ஒரு எளிதான, விரைவான மற்றும் சுவையான மதிய உணவுப்பெட்டி செய்முறையாகும், இது அரிசியை ஊறவைத்தால் வெறும் 20 நிமிடங்களில் செய்யலாம். பாசுமதி அரிசி மற்றும் இத்தாலிய
Advertisement
மூலிகைகளின் கலவையானது, இதன் சுவையை உயர்த்துகிறது மற்றும் உணவக பாணியில் ஃப்ரைட் ரைஸ் சுவையை அளிக்கிறது , ஆனால் எந்த சாஸ்களும் இல்லாமல் இந்த மிதமான மசாலா சாதம் அடிமையாக்கும் சுவைகளுடன் குழந்தைகளை கவர்கிறது.  முட்டைகோஸில்உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். இன்று முட்டைகோஸ் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Cabbage Rice
Prep Time
Advertisement
10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 238

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 100 கிராம் முட்டைக்கோஸ்
  • 2 கப் வேக வைத்து சாதம்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 ஸ்பூன் பொடிதாக நறுக்கிய இஞ்சி
  • 1 ஸ்பூன் பொடிதாக நறுக்கிய பூண்டு
  • 1/2 ஸ்பூன் சீரகத்தூள்
  • மிளகுத்தூள் காரத்திற்கேற்ப
  • உப்பு தேவையான அளவு
  • 3 ஸ்பூன் கடலை எண்ணெய்

Instructions

  • முதலில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பொடித்தாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • அவை வதங்கியதும், வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை நன்கு வதங்கினால் போதும்.
  • பின், நீளமாக வெட்டிய முட்டைகோஸ் சேர்த்து கிளறவும். உப்பு மற்றும் சீரக தூள் சேர்த்து கிளறி, 5-7நிமிடங்களுக்கு எண்ணையிலேயே முட்டைகோஸை  நன்றாகவேக வைக்கவும்.
  • முட்டைக்கோஸ் நன்றாக வெந்ததும், மிளகு தூள் மற்றும் வேக வைத்து சாதம் சேர்த்து நன்றாக கிளறி விட்டு உப்பு, காரம் சரி பார்க்கவும்.
  • அவ்வளவு தான் இதன்‌ மேல் சிறிது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். முட்டைகோஸ் கலர் மாறாமல் வேகா வைத்தால் சாதம் நன்றாக வெள்ளை நிறத்தில் இருக்கும்.
  • சுவையான,காரமான முட்டைகோஸ் சாதம் ரெடி.

Nutrition

Serving: 400g | Calories: 238kcal | Carbohydrates: 72g | Protein: 13g | Fat: 8g | Saturated Fat: 1.6g | Cholesterol: 8mg | Sodium: 3mg | Potassium: 381mg | Fiber: 4g | Calcium: 1mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

6 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

17 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

23 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago