சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா குடைமிளகாய் கிரேவி இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!

சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா நம்ம எப்பவுமே உருளைக்கிழங்கு குருமா பன்னீர் பட்டர் மசாலா வெஜ் குருமா சிக்கன் குருமா முட்டை குருமா அப்படின்னு செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா எப்பவுமே அதே மாதிரி செய்யாம சைவத்துல ஒரு சூப்பரான குடைமிளகாய் கிரேவி செஞ்சு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

By ·

சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா நம்ம எப்பவுமே உருளைக்கிழங்கு குருமா பன்னீர் பட்டர் மசாலா வெஜ் குருமா சிக்கன் குருமா முட்டை குருமா அப்படின்னு செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா எப்பவுமே அதே மாதிரி செய்யாம சைவத்துல ஒரு சூப்பரான குடைமிளகாய் கிரேவி செஞ்சு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ்க்கு சப்பாத்தி இல்லனா பூரி செஞ்சு இந்த குடைமிளகாய் கிரேவியை சைடு டிஷ்ஷா கொடுத்து விடுங்க. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டு வருவாங்க. குடைமிளகாயில் நிறைய ப்ரொஜெஸ்ட்ரான் சத்துக்கள் இருக்கு.

அதனால எல்லா வயதினருமே அடிக்கடி தாராளமா இந்த குடைமிளகாய உணவில் சேர்த்துக்கலாம். குடை மிளகாய் வச்சு கிரேவி மட்டுமில்லாமல் ஆம்லெட் கூட செய்யலாம், டேஸ்ட் சூப்பரா இருக்கும். இந்த ரெசிபி செய்றதுக்கு நம்ம குடைமிளகாயை அஞ்சு நிமிஷம் மட்டும் வதக்கி சேர்த்தால் போதும் நிறைய நேரம் வேக வைக்க கூடாது. குடைமிளகாய் கொஞ்சம் கிரன்சியா இருந்தா தான் சாப்பிடுவதற்கு நல்லா இருக்கும். டேஸ்டான குடைமிளகாய் கிரேவியை சப்பாத்தி பூரி இட்லி தோசை சாதம் அப்டின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டு பாருங்க.

எல்லாத்துக்குமே சூப்பரான காமினேஷனா இருக்கும். அதுமட்டுமில்லாம கலவை சாதங்களான தயிர் சாதம் தக்காளி சாதம் புளி சாதம் லெமன் சாதம், தேங்காய் சாதம் எல்லாத்துக்குமே பெர்ஃபெக்ட்டான காம்பினேஷனாக இருக்கும். சுவையான இந்த குடைமிளகாய் கிரேவில சாதம் போட்டு கிளறி ஸ்கூல் லன்ச் பாக்ஸ்க்கு குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம். சுட சுட சாதத்திலேயே போட்டு பெரட்டி சாப்பிட ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த சுவையான சிம்பிளான குடைமிளகாய் கிரேவியை எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : எப்பவும் ஒரே மாதிரியான சட்னி செய்யாம குடைமிளகாய் சட்னி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

Recipes AMP · Quick view
View full