ஆரோக்கியமான சுவையான கேரட் மில்க் ஷேக் சும்மா குளுகுளுன்னு செய்து குடிச்சு பாருங்களேன்!!!
மில்க் ஷேக்கில் பனானா மில்க்க்ஷேக், ஸ்ட்ராபெர்ரி மில்க்க்ஷேக், வெண்ணிலா மில்க்க்ஷேக்,சாக்லேட் மில்க்ஷேக் என்று பல விதங்களில் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் கேரட் வைத்து சூப்பரான மில்க் ஷேக் ரெசிபியை காண்போம். கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதனை
மில்க் ஷேக்கில் பனானா மில்க்க்ஷேக், ஸ்ட்ராபெர்ரி மில்க்க்ஷேக், வெண்ணிலா மில்க்க்ஷேக்,சாக்லேட் மில்க்ஷேக் என்று பல விதங்களில் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் கேரட் வைத்து சூப்பரான மில்க் ஷேக் ரெசிபியை காண்போம். கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதனை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
வழக்கமாக கேரட் வைத்து பொரியல், சாம்பார், சூப் போன்றவற்றில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு இருப்போம். கேரட் போன்ற காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடும் விதத்தில் இந்த மாதிரி செய்து கொடுத்தால் சத்தமில்லாமல் அனைத்தையும் மிச்சமில்லாமல் சாப்பிட்டு முடிப்பார்கள்.
மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக கேரட்டைக் கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். இதை வீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி மிக எளிதாக செய்யலாம். அதே சமயம் ருசியையும் சுவையையும் அனைவரும் விரும்புவார்கள். கேரட் மில்க் ஷேக் கேரட், பால், பாதாம் மற்றும் தேனைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சுவையான கேரட் மில்க் ஷேக்கை உண்டு மகிழுங்கள்.