Advertisement
சட்னி

சுவையான காலிஃபிளவர் தண்டு சட்னி செய்வது எப்படி ?

Advertisement

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி என மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த காலிஃபிளவர் தண்டு சட்னியை செய்து பாருங்கள்.

இதையும் படியுங்கள் : தஞ்சாவூர் வெங்காய சட்னி செய்வது எப்படி ?

Advertisement

கண்டிப்பாக இந்த காலிஃபிளவர் தண்டு சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்தையும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். ஆகையால் இன்று இந்த காலிஃபிளவர் தண்டு சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

காலிஃபிளவர் தண்டு சட்னி | Cauliflower Stems Chutney Recipe in Tamil

Print Recipe
உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த காலிஃபிளவர் தண்டு சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த காலிஃபிளவர் தண்டு சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்தையும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். ஆகையால் இன்று இந்த காலிஃபிளவர் தண்டு சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
Course chutney
Cuisine Indian, TAMIL
Keyword cauliflower stems chutney, காலிஃபிளவர் தண்டு சட்னி
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 people
Calories 120

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

  • 1 ½ கப் காலிஃபிளவர் தண்டு சிறியதாக நறுக்கியது
  • 4 பச்சை மிளகாய் 
  • 2 தக்காளி நறுக்கியது
  • 4 tbsp எண்ணெய்
  • ½ tbsp கடுகு
  • 1 tbsp கடலை பருப்பு
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • 2 tbsp எள்
  • 4 வர மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பல் பூண்டு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் காலிஃபிளவரின் தண்டு
    Advertisement
    பகுதிகளை எடுத்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள் அதன் பிறகு இரண்டு முறை தண்ணீர் வைத்து நன்கு அலசி கொள்ளுங்கள்.பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  • எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் பச்சை மிளகாய் பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய் நன்றாக வதங்கியதும் இதனுடன் காலிஃபிளவர் தண்டுகளையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள் தண்டுகள் பாதி வெந்ததும். இரண்டு தக்காளியை நறுக்கிய இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
    Advertisement
  • பின்பு இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கடாயை மூடி வைத்துவிட்டு வேக வையுங்கள். மூடியை திறந்து கிளறிவிட்டு காலிஃபிளவர் தண்டுகள் நன்றாக வெந்ததும் வேறொரு பாத்திரத்தில் அதை மாற்றி விட்டு நன்றாக குளிர வையுங்கள்.
  • பின் கடயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் வரமிளகாய் இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளவும்.
  • பின் இதனுடன் எள்ளும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் இந்த பொருட்களையும் காலிஃபிளவர் தண்டுடன் சேர்த்து குளிர வைத்துக் கொள்ளுங்கள்.
  • சிறிது நேரம் கழித்து அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மை போல் அரைத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான காலிபிளவர் தண்டு சட்னி தயார் இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 4people | Calories: 120kcal | Carbohydrates: 21g | Protein: 16g | Fat: 3.4g | Sodium: 68mg | Potassium: 420mg | Fiber: 39g | Sugar: 5.6g | Calcium: 13mg

English Overview: cauliflowr stems chutney is one of the most important chutney in south india. cauliflower stems chutney recipe or cauliflower stems chutney seivathu eppadi or cauliflower stems chutney recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Advertisement
Prem Kumar

Recent Posts

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

3 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

4 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான டர்கிஷ் ப்ரெட் இப்படி செய்து கொடுங்க! டக்குனு காலை டிபன் ரெடி செஞ்சிடலாம்!!

டர்கிஷ் பிரட் டோஸ்ட் வழக்கமான டிபன் வகைகளில் இருந்து சற்றே வேறுபட்டது. இதனை மிகவும் சுலபமாக 10 முதல் 15…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 மே 2024!

மேஷம் இன்று வர்த்தகர்கள் வர்த்தகத்தில் இழப்புகளை சந்திக்க நேரிடும். பேரக் குழந்தைகள் உங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். சிலருக்கு வேலை…

7 மணி நேரங்கள் ago

ஜவ்வரிசி கிச்சடி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்!

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஒரு உணவை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் மசாலாப் பொருட்கள், இவற்றை…

16 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!

இதுவரை நீங்கள் சேமியா கீர், கேரட் கீர், பூசணி கீர், ரவை கீர் தான் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் சர்க்கரை…

17 மணி நேரங்கள் ago