- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- chutney
நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி என மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த காலிஃபிளவர் தண்டு சட்னியை செய்து பாருங்கள்.
இதையும் படியுங்கள் : தஞ்சாவூர் வெங்காய சட்னி செய்வது எப்படி ?
கண்டிப்பாக இந்த காலிஃபிளவர் தண்டு சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்தையும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். ஆகையால் இன்று இந்த காலிஃபிளவர் தண்டு சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
English Overview: cauliflowr stems chutney is one of the most important chutney in south india. cauliflower stems chutney recipe or cauliflower stems chutney seivathu eppadi or cauliflower stems chutney recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.
Ingredients
Method
முதலில் காலிஃபிளவரின் தண்டு பகுதிகளை எடுத்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள் அதன் பிறகு இரண்டு முறை தண்ணீர் வைத்து நன்கு அலசி கொள்ளுங்கள்.பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.
எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் பச்சை மிளகாய் பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய் நன்றாக வதங்கியதும் இதனுடன் காலிஃபிளவர் தண்டுகளையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள் தண்டுகள் பாதி வெந்ததும். இரண்டு தக்காளியை நறுக்கிய இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பின்பு இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கடாயை மூடி வைத்துவிட்டு வேக வையுங்கள். மூடியை திறந்து கிளறிவிட்டு காலிஃபிளவர் தண்டுகள் நன்றாக வெந்ததும் வேறொரு பாத்திரத்தில் அதை மாற்றி விட்டு நன்றாக குளிர வையுங்கள்.
பின் கடயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் வரமிளகாய் இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளவும்.
பின் இதனுடன் எள்ளும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் இந்த பொருட்களையும் காலிஃபிளவர் தண்டுடன் சேர்த்து குளிர வைத்துக் கொள்ளுங்கள்.
சிறிது நேரம் கழித்து அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மை போல் அரைத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான காலிபிளவர் தண்டு சட்னி தயார் இனிதே தயாராகிவிட்டது.






