- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- chutney
நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த தஞ்சாவூர் வெங்காய சட்னியை செய்து பாருங்கள்.
இதையும் படியுங்கள் : செட்டிநாடு காரசாரமான பச்சை மிளகாய் சட்னி செய்வது எப்படி ?
கண்டிப்பாக இந்த தஞ்சாவூர் வெங்காய சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்தையும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். ஆகையால் இன்று இந்த தஞ்சாவூர் வெங்காய சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
Ingredients
Method
முதலில் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள், எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக சிவக்கும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.
அதன்பின் இதனுடன் நான் வைத்திருக்கும் தோல் உரித்த சின்ன வெங்காயங்களை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை கொள்ளுங்கள், வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் ஒரு கொத்து கருவேப்பிலை சின்ன துண்டு புளி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
அதன் பின் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். அனைத்து பொருட்களையும் ஒரு நிமிடம் கடாயில் வைத்து நன்கு வதக்கிய பின் கடாயை இறக்கி வதக்கிய பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு குளிர வையுங்கள்.
பின் வதக்கிய பொருட்கள் குளிர்ந்த உடன் அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.
எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் சிறிது கருவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளுங்கள். பின் நாம் மிக்ஸியில் அரைத்த சட்னியை இதனுடன் சேர்த்து கொள்ளவும்.
பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு ஒரு நிமிடம் கடாயில் வைத்து நன்றாக வதக்கியதும் இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான தஞ்சாவூர் வெங்காய சட்னி தயார்.






