பொதுவாகவே கடல் உணவுகளில் அனைவருக்கும் பிடித்த அதேசமயம் சற்று பயமுறுத்தும் உணவென்றால் அது நண்டு தான். கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் நண்டு அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. பொதுவாகவே கடல் உணவுகளை அசைவ பிரியர்கள் அதிகமாகவே விரும்பி உண்கின்றனர். இதன் சுவைக்கு ஒட்டுமொத்த நபர்களும் அடிமையாகி விடுவார்கள். மீன் வகைகளைக் காட்டிலும், நண்டு, இறால் வகைகளின் சுவைகளுக்கு அடிமையாகாத அசைவப் பிரியர்கள் இருக்கவே மாட்டார்கள். இது மிகவும் சுவை மிகுந்த உணவாகும். ஆரோக்கியத்திலும் நண்டு மற்ற கடல் உணவுகளுக்கு சளைத்ததில்லை.
கடல் உணவுகளில் ஒன்றான நண்டு சளி, இருமலுக்கு சிறந்த தீர்வு அளிக்கின்றது. சளி, இருமல் என்ற தொந்தரவு ஏற்பட்டாலே நண்டு வாங்கி சமைத்து சாப்பிடுபவர்கள் அதிகம். அதுவும் நண்டு குழம்பு சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும். இதுவரை எத்தனையோ வகையான நண்டு உணவுகளை சுவைத்திருப்பீர்கள். ஆனால் சிலோன் நண்டு குழம்பை செய்துள்ளீர்களா? இது மிகவும் சுவையானது மற்றும் நன்கு காரசாரமாகவும் இருக்கும். மேலும் இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறும் இருக்கும்.
நண்டில் அதிக அளவிலான புரோட்டின் சத்துக்கள் இருப்பதால், அனைத்து வயதினரும் இதனை சாப்பிடுவது நல்லது. ஏனெனில், தசைகளின் சீரமைப்புக்கு உதவுகிறது. நண்டில் நியாசின் அதிகமாக உள்ளது. இது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் கிளிசரைடு அளவை குறைக்கும். நண்டு உடலில் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்தும். இதனால் முகத்தில் பருக்கள் வராமல் தடுக்கும். சளி தொல்லை இருப்பவர்கள் தொடர்ந்து நண்டு சாப்பிட்டு வந்தால் நிரந்தரமாக தீர்வு கிடைக்கும். எனவே வாரத்தில் இரண்டு முறையாவது உணவில் கட்டாயம் நண்டு சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வளவு சத்து நிறைந்த நண்டை வைத்து காரசாரமான சிலோன் நண்டு குழம்பை மண் சட்டியில் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிலோன் நண்டு குழம்பு | Ceylon Crab Curry Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 மண் கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கி நண்டு
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 2 டீஸ்பூன் மல்லி தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் வெந்தயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 கப் சின்ன வெங்காயம்
- 2 தக்காளி
- 1/4 கப் புளி கரைசல்
- 1/4 கப் தேங்காய்
- 1 டீஸ்பூன் மிளகு தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகு
- 10 பல் பூண்டு
செய்முறை
- முதலில் நண்டை நன்கு சுத்தம் செய்து விட்டு தண்ணீரில் இரண்டு முறை அலசி எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், மிளகு, சோம்பு, சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு பவுளில் புளி கரைசல் எடுத்து அதனுடன் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், அரைத்த தேங்காய் விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பின் ஒரு மண் கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம், சோம்பு, கருவேப்பிலை சேர்ந்து தாளிக்கவும்.
- பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்ந்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும்.
- பின் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள நண்டை சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு வதக்கவும். பின் கலந்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
- பின் நண்டு நன்கு கொதித்து தண்ணீர் சிறிது சுண்டி வந்ததும் 10 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சிலோன் நண்டு குழம்பு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இந்த வாரம் ஸ்பெஷாலக நண்டு வாங்கி செட்டிநாடு நண்டு மசாலா இப்படி ட்ரை பண்ணி பாருங்க!