சப்பாத்தி, பூரி ஏன் இட்லி, தோசை கூட சாப்பிட ருசியான கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு குருமா இனி இப்படி செய்து பாருங்க!

சப்பாத்தி, பூரி போன்றவற்றை செய்வதாக இருந்தால், அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொண்டைக்கடலை மற்றும் உருளைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு சுவையான குருமாவை செய்யுங்கள். இந்த குருமா சப்பாத்தி பூரிக்கு மட்டுமின்றி, சாதத்து

By Prem Kumar · 5/3/2024

சப்பாத்தி, பூரி போன்றவற்றை செய்வதாக இருந்தால், அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொண்டைக்கடலை மற்றும் உருளைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு சுவையான குருமாவை செய்யுங்கள். இந்த குருமா சப்பாத்தி பூரிக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். நம்மில் பலருக்கு எளிமையான முறையில் சப்பாத்தி செய்யத் தெரிந்த அளவுக்கு குருமா செய்ய தெரியாது. குருமா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குருமா செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள். அப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றான கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு குருமாவை எப்படி செய்வதென்று இந்த பதிவில்‌ பார்க்கலாம்.

கொண்டைக்கடலை ஆரோக்கியம் நிறைந்த உணவு வகைகளில் ஒன்று. இதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, சோடியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன. அதனால்தான் சுண்டலை ஊற வைத்து பச்சையாக சாப்பிட்டு வந்தால் நல்லது என கூறுகின்றனர். இந்த குருமாவை ஒரு முறை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள் அசந்து போய்டுவாங்க. இந்த கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு குருமா செய்வது மிகவும் சுலபமாக இருப்பதோடு, பூரி, சப்பாத்திக்கு அட்டகாசமாகவும் இருக்கும்.

இதனையும் படியுங்கள் : நீலகிரியின் சுவையான வெஜ் குருமா ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!

Recipes AMP · Quick view
View full