சுவையான வெஜ் குருமா அதுவும் மலைகளில் கிடைக்க கூடிய காய்கறி வைத்து பிரஷான காய்கறிகளை வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான அருமையான வெஜ் குருமா இதனை நீலகிரியில் மிகவும் பிரபலமாக இருக்கும் இதனை சாப்பிடுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லலாம் மிகவும் அருமையான ஒரு சுவையான ருசியான வெஜ் குருமா ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும்
பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான வெஜ் குருமா செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த வெஜ் குருமா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
நீலகிரி வெஜ் குருமா | Nilagiri Veg Kuruma Receipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- பட்டை
- 2 கிராம்பு
- 4 ஏலக்காய்
- ½ cup பட்டாணி
- ½ cup உருளைக்கிழங்கு
- ½ cup கேரட்
- ½ cup காலிஃப்ளவர்
- ½ cup பீன்ஸ்
- 2 வெங்காயம்
- 8 பச்சை மிளகாய்
- 5 gm புதினா
- 20 gm கொத்தமல்லி இலை
- ¼ tsp சோம்பு
- 1 இஞ்சி
- 5 பூண்டு
- 1 cup தேங்காய்ப்பால்
செய்முறை
- வெஜ் குருமா செ ய்ய முதலில் மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலை, புதினா, பச்சை மிளகாய், சோம்பு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- குக்கரில் தண்ணீர் ஊற்றி காய்கறிகளை ஒரு விசில் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் வறுத்து நீளமாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.
- பாதி வெந்த காய்கறிகளை அதில் போட்டு அரைத்த விழுதை சேர்க்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலவையை மூடி வைக்க வேண்டும். உப்பு சேர்க்க வேண்டும்.
- கலவை வெந்ததும் தேங்காய் சில்லில் அரைத்து எடுத்த தேங்காய் முதல் பாலை அதில் சேர்க்க வேண்டும்.
- தேங்காய் பயிர் சேர்த்தவுடன் கலவை அதிகமாக கொதிக்க விட கூடாது. கொத்த மல்லி இலையை தூவ வேண்டும். இப்பொழுது சுவையான நீலகிரி வெஜ் குருமா தயார்
Nutrition
இதையும் படியுங்கள்: காலிப்ளவர் குருமா இப்படி செய்து பாருங்க!