- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
சப்பாத்தி, பூரி போன்றவற்றை செய்வதாக இருந்தால், அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொண்டைக்கடலை மற்றும் உருளைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு சுவையான குருமாவை செய்யுங்கள். இந்த குருமா சப்பாத்தி பூரிக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். நம்மில் பலருக்கு எளிமையான முறையில் சப்பாத்தி செய்யத் தெரிந்த அளவுக்கு குருமா செய்ய தெரியாது. குருமா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குருமா செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள். அப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றான கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு குருமாவை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கொண்டைக்கடலை ஆரோக்கியம் நிறைந்த உணவு வகைகளில் ஒன்று. இதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, சோடியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன. அதனால்தான் சுண்டலை ஊற வைத்து பச்சையாக சாப்பிட்டு வந்தால் நல்லது என கூறுகின்றனர். இந்த குருமாவை ஒரு முறை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள் அசந்து போய்டுவாங்க. இந்த கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு குருமா செய்வது மிகவும் சுலபமாக இருப்பதோடு, பூரி, சப்பாத்திக்கு அட்டகாசமாகவும் இருக்கும்.
இதனையும் படியுங்கள் : நீலகிரியின் சுவையான வெஜ் குருமா ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!
Ingredients
Method
முதலில் கொண்டைக்கடலையை ஒரு குக்கரில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பட்டை, இலவங்கம், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அதன்பிறகு நாம் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்கு கலந்து அதனுடன் உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.
இது நன்கு கொதித்ததும் சீரக தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு மல்லித்தழை சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு குருமா தயார்.






