மாலை வேளையில் சுட சுட சாப்பிட சன்னா சமோசா சாட் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் சாட் உணவுகளை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் கொண்டைக்கடலை இருந்தால், அதைக் கொண்டு சன்னா சமோசா சாட் செய்து கொடுங்கள். சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் வரை அனைவரும்

By Prem Kumar · 6/9/2025

மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் சாட் உணவுகளை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் கொண்டைக்கடலை இருந்தால், அதைக் கொண்டு சன்னா சமோசா சாட் செய்து கொடுங்கள். சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் சாட்டும் ஒன்று. எவ்வளவு கொடுத்தாலும் அனைத்தையும் முழுமையாக சாப்பிட்டு மீண்டும் சாப்பிட கேட்பார்கள். சாட்டில் ஆலு சாட், சென்னா சாட், சமோசா சாட், கச்சோரி சாட், பேல் பூரி, தஹி பூரி என்று பல விதங்களில் செய்யலாம். எந்த சாட் ஆனாலும் எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் அனைவரும் சாப்பிட விரும்புவர்.

அப்படிப்பட்ட சாட் வகையில் ஒன்றான சன்னா சமோசா சாட் ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம். வழக்கமாக சாட் போன்ற உணவுகளை வெளியில் வாங்கி தான் சுவைத்து இருப்போம். ஆனால் இன்று நாம் அதனை வீட்டில் செய்வதால் அதிகமாக செய்து சாப்பிடலாம். சன்னா சமோசா சாட் ரெசிபி வட இந்தியாவில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் ஆகும். சாட் என்றாலே எல்லோர் நாக்கிலும் எச்சு ஊற வைத்து விடும். அதிலும் சன்னா பயன்படுத்தி செய்வது இதன் டேஸ்ட்டை மேலும் மேலும் சுவையூட்டுகின்றன.

மாலை வேளையில் சற்று வித்தியாசமாகவும், ஆரோக்கியமானதாகவும் ஏதேனும் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், அப்போது வெள்ளை கொண்டைக்கடலை வைத்து ஒரு சாட் ஐட்டம் செய்து குழந்தைகளுக்குக் கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபியை சீக்கிரமாக செய்வதோடு நமது பசிக்கும் மிகச் சிறந்த உணவாகும். மிகவும் மொறு மொறுப்பான நொறுங்கும் தன்மையுடன் உள்ள சமோசாவுடன் மசாலா தூவி, கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதை பார்த்தாலே போதும் உங்கள் வயிற்றுக்கும் கண்களுக்கும் விருந்தாகவே மாறிவிடும். வாருங்கள் இந்த சன்னா சமோசா சாட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Recipes AMP · Quick view
View full