சண்டிகேஸ்வரர் வழிபாடு!!
சண்டிகேஸ்வரர் சிவன் கோவில்களில் அபிஷேக நீர் வரக்கூடிய கோமுகத் தீர்த்தத்திற்கு அருகே வடக்கே இடது புறத்தில் இருக்கக்கூடிய தனியான ஒரு சன்னதியில் தியான நிலையில் அமர்ந்திருப்பார். இவர் சதா சர்வ காலமும் சிவபெருமானை நினைத்து தியானம் செய்து கொண்டிருப்பவர். கோவிலுக்கு செல்பவர்கள் சண்டிகேஸ
சண்டிகேஸ்வரர் சிவன் கோவில்களில் அபிஷேக நீர் வரக்கூடிய கோமுகத் தீர்த்தத்திற்கு அருகே வடக்கே இடது புறத்தில் இருக்கக்கூடிய தனியான ஒரு சன்னதியில் தியான நிலையில் அமர்ந்திருப்பார். இவர் சதா சர்வ காலமும் சிவபெருமானை நினைத்து தியானம் செய்து கொண்டிருப்பவர். கோவிலுக்கு செல்பவர்கள் சண்டிகேஸ்வரரை சொடக்கு போட்டு வழிபடுவதும் கைகளை தட்டி கரவொலியை எழுப்பி வழிபடுவதுமாக இருப்பார்கள். மேலும் தவறான நம்பிக்கைகளால் நாம் முடித்து இருக்கும் துணையிலிருந்து நூலை எடுத்து சண்டிகேஸ்வரரின் மீது போட்டு வழிபடுவதும் உண்டு. ஆனால் சண்டிகேஸ்வரர் உடைய வழிபாட்டு முறையை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
சண்டிகேஸ்வரர்
சண்டிகேஸ்வரர் புராணங்களின்படி பரிவார தெய்வம் கிடையாது சிவனுக்கு இணையான தெய்வமாகவும் பெரும் தெய்வமாகவும் இருந்தவர். இதற்கான சான்றுகளும் கூட உள்ளது இவர் விசார சருமன் என்கிற பசுக்களையும் மேய்க்கும் தொழில் செய்தார் 12 வயது சிறுவனாக இருந்தபோதே வேத ஞானம் பெற்றவர். சிவபெருமான் மீது கொண்ட பக்தியால் தினமும் மணலில் சிவலிங்கத்தை செய்து பசுவை லிங்கத்திற்கு பால் கறக்க செய்வார். அப்படி ஒரு முறை மணல் லிங்கத்தின் மீது பசு பால் சுரப்பதை கண்ட விசார சருமர் உடைய தந்தை எச்சத்தன் கோபம் உற்றார். பால் எல்லாம் வீணாகப் போகிறதே என்று காலால் சிவலிங்கத்தை எட்டி உதைத்தார். இதனைக் கண்ட விசாரசருமர் கையில் இருந்த குச்சியை எடுத்து தந்தையின் காலின் மீது வீசினார் உடனே அது மழுவாக மாறி தந்தையின் காலை காயப்படுத்தியது.
விசாரசருமன் உடைய பக்தி
இவருடைய பக்தியை கண்ட சிவபெருமான் நேரில் தோன்றி விசார சருமனுக்கு சண்டிகேஸ்வரர் பதவியை கொடுத்தார். இவர் கண்ணப்பருக்கு அடுத்த நாயன்மார்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர். சிவனுடைய உணவு ஆடை ஆபரணங்கள் சொத்துக்கள் என அனைத்தையும் நிர்வகிக்கும் ஒரு பதவியின் பெயர் தான் சண்டிகேஸ்வர பதவி. இந்த பதவியை சண்டிகேஸ்வரர் மட்டும் இல்லாமல் வெவ்வேறு யுகங்களில் பலரும் வகித்ததாக புராணங்கள் கூறுகிறது. சனீஸ்வரரும் பிரம்மதேவரும் கூட சண்டிகேஸ்வர பதவியில் இருந்தவர்கள் தான். பிரம்மதேவர் சதுர்முக சண்டீஸ்வரராகவும் சனீஸ்வரர் யம சண்டிகேஸ்வரர் ஆகவும் இருப்பதை பல சிவன் கோவில்களில் காண முடியும்.
சண்டிகேஸ்வரரை வழிபடும் முறை
சிவன் கோவிலுக்கு சென்று சிவனை வழிபட்டு விட்டு கோவிலை வலம் வரும்போது சண்டிகேஸ்வரர் சன்னதியில் அமர்ந்து இரு கைகளையும் விரித்து சத்தமே எழுப்பாமல் தேய்த்து காண்பித்து வழிபட வேண்டும். தியான நிலையில் சண்டிகேஸ்வரர் அமர்ந்திருப்பதால் நாமும் அமைதியாக வழிபட வேண்டும் அதனால் ஆன்மீக பலமும் ஆத்ம பலமும் நமக்கு கிடைக்கும். சண்டிகேஸ்வரருக்கு புதிய வஸ்திரத்தை தான் கொடுக்க வேண்டும். அதை தவிர்த்து நம் உடம்பில் அணிந்திருக்கும் வஸ்திரத்தில் இருந்து நூலை பிரித்து அவர் மீது போடுவது பாவம் என்று கூறப்படுகிறது. சண்டிகேஸ்வரருக்கு வஸ்திரம் சாற்றி வழிபடுவது சிவபெருமானுடைய அருள் கிடைக்க ஒரு நல்ல வழி. சிவபெருமானை வழிபட்டு விட்டு அங்கு கொடுக்கப்படும் பிரசாதங்கள் விபூதி முதற்கொண்டு எதனையும் சண்டிகேஸ்வரர் அனுமதி இல்லாமல் வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது. அவரை வழிபட்டு விட்டு அதன் பின்னர் கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு செல்ல வேண்டும். சண்டிகேஸ்வரத்தை வழிபடும் போது அருகில் இருப்பவர்களுடன் பேசக்கூடாது. அமைதியான முறையில் சண்டிகேஸ்வரரை வழிபட்டால் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : சனி பெயர்ச்சியால் ஏற்படும் ஏழரை நாட்டு சனி பாதிப்பு விலக வன்னி மரச்செடி வழிபாடு!!