மாலை நேர ஸ்நாக்ஸாக சுட சுட சேப்பங்கிழங்கு சமோசா இப்படி செய்து பாருங்க!

இந்தியாவில் விதவிதமான உணவுகளுக்கு என்றுமே பஞ்சம் ஏற்பட்டதில்லை. நாம் விதவிதமாக தேர்வு செய்து சாப்பிடுவதற்கு ஏராளமான உணவுகள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன. வட இந்தியா முழுமைக்கும் சமோசாவானது மிக பிரபலமான உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவிலும் சமோசாக்கள் கிடைக்கின்றன. நம்மில் பலருக்கும்

By Prem Kumar · 26/10/2023

இந்தியாவில் விதவிதமான உணவுகளுக்கு என்றுமே பஞ்சம் ஏற்பட்டதில்லை. நாம் விதவிதமாக தேர்வு செய்து சாப்பிடுவதற்கு ஏராளமான உணவுகள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன. வட இந்தியா முழுமைக்கும் சமோசாவானது மிக பிரபலமான உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவிலும் சமோசாக்கள் கிடைக்கின்றன. நம்மில் பலருக்கும் மிகவும் பிடித்த தின்பண்டங்களில் ஒன்று சமோசா. இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

எத்தனை முறை வெளியில் சென்றாலும், அத்தனை முறையும் ஒரு டீயும், சமோசாவும் சாப்பிடாமல் வீட்டிற்கு திரும்பிய சரித்திரம் யாருடைய வாழ்க்கையிலும் இருக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு மாலை நேர சிற்றுண்டியாக சமோசா உள்ளது. இது செய்வது பெரிய விஷயம் அல்ல, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இதை சுலபமாக செய்யலாம்.

இந்த சமோசாவில் விதவிதமான வகைகள் இருக்கின்றன. உருளைக்கிழங்கு சமோசா, பன்னீர் சமோசா,வெங்காய சமோசா,கேரட் மற்றும் கோஸ் சமோசா,மேகி சமோசா, மற்றும் சாக்லேட் சமோசா, பழைய சமோசா முறைகளும் புதிய சமோசா முறைகளுமாக நிறைய வகைகள் இருக்கின்றன. மாலை நேர ஸ்நாக்ஸ் வகைகளில் போண்டா, பஜ்ஜி, வடை என பல ரெசிப்பிகளைப் பார்த்திருக்கிறோம், அந்தவகையில் இப்போது சேப்பங்கிழங்கு சமோசா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full