Advertisement
சைவம்

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான சீஸ் சாண்ட்விச் ஒரு முறை இப்படி செய்து பாருங்க!

Advertisement

சாண்ட்விச் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. சான்ட்விச் பிடிக்காத குழந்தைகள் இல்லை. சாண்ட்விச் என்றாலே குழந்தைகள் குஷியாகிவிடுவார்கள். அதுவும் காலை பிரேக் ஃபாஸ்ட் சாண்ட்விச் என்றால் இட்லி தோசையிலிருந்து விடுதலை என மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள். இதனால் உங்களுக்கும் சிரமமின்றி வேலை எளிதாக முடிந்துவிடும். இது செய்வதற்கு சுலபமானதும்கூட. பிரேக்பாஸ்டோ, டின்னரோ சுலபமாக ஒரு பிரெட்டில் டேஸ்டியாக சத்தாக முடியும்போது அதையும் அவ்வப்போது செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம்தானே! சாண்ட்விச்சில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் சாண்ட்விச், மட்டன் சாண்ட்விச், வெஜிடபிள் சாண்ட்விச், பன்னீர் சாண்ட்விச், மற்றும் மஷ்ரூம் சாண்ட்விச் பிரபலமானவை. இன்று இங்கு நாம் காண இருப்பது சீஸ் சாண்ட்விச்.

இந்த சீஸ் சாண்ட்விச்சின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெறும் வெங்காயம், தக்காளி, மற்றும் சீஸ் கொண்டு வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமுமின்றி நாம் செய்து விடலாம். மேலும் சமைக்க தெரியாதவர்கள் கூட இந்த சீஸ் சாண்ட்விச்சை வெகு சுலபமாக முதல் முறையிலேயே சரியாக செய்து விடலாம். அது மட்டுமின்றி நம் குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கோ அல்லது அலுவலகங்களுக்கோ கொண்டு செல்ல இவை ஒரு அருமையான லஞ்ச்பாக்ஸ் ரெசிபியும் கூட. சாண்ட்விச் என்றாலே பெரும்பாலும் அதை நாம் கடைகளுக்கு சென்று தான் சாப்பிடுவோம். ஆனால் உங்களுடைய வீட்டில் பிரட் பாக்கெட் இருக்கிறதா, அது போதும் 5 நிமிடத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த சீஸ் சாண்ட்விச் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

சீஸ் சாண்ட்விச் | Cheese Sandwich Recipe In Tamil

Print Recipe
சாண்ட்விச் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. சான்ட்விச் பிடிக்காத குழந்தைகள் இல்லை. சாண்ட்விச் என்றாலே குழந்தைகள் குஷியாகிவிடுவார்கள். அதுவும் காலை பிரேக் ஃபாஸ்ட் சாண்ட்விச் என்றால் இட்லி தோசையிலிருந்து விடுதலை என மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள். இதனால் உங்களுக்கும் சிரமமின்றி வேலை எளிதாக முடிந்துவிடும். இது செய்வதற்கு சுலபமானதும்கூட. பிரேக்பாஸ்டோ, டின்னரோ சுலபமாக ஒரு பிரெட்டில் டேஸ்டியாக சத்தாக முடியும்போது
Advertisement
அதையும் அவ்வப்போது செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம்தானே! சாண்ட்விச்சில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் சாண்ட்விச், மட்டன் சாண்ட்விச், வெஜிடபிள் சாண்ட்விச், பன்னீர் சாண்ட்விச், மற்றும் மஷ்ரூம் சாண்ட்விச் பிரபலமானவை. இன்று இங்கு நாம் காண இருப்பது சீஸ் சாண்ட்விச்.
Course Breakfast
Cuisine Indian
Keyword Cheese Sandwich
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 120

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 குக்கர்
  • 1 தவா

Ingredients

  • 6 பிரெட் துண்டுகள்
  • 1/4 கப் சீஸ்
  • 1 டேபிள் ஸ்பூன் பட்டர்
  • 1 பெரிய உருளைக்கிழங்கு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 டீஸ்பூன் சாட் மசாலா
  • புதினா, கொத்தமல்லி சிறிதளவு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 2 பல் பூண்டு

Instructions

  • முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • தக்காளி, வெங்காயம், மல்லி இலையை நறுக்கி வைத்துக் கொள்ளவும். சீஸ் துருவி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, பூண்டு சேர்த்து அரைத்து பச்சை சட்னி தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் பிரெட் துண்டுகளில் கிரீன் சட்னி தடவி அதில் வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் சாட் மசாலா, நறுக்கிய தக்காளி, வெங்காயம், மல்லி இலை வைத்து அதன் மேலும் கொஞ்சம் சாட் மசாலா தூள் தூவவும்.
  • பின் துருவி வைத்துள்ள சீஸ் தூவி, மற்றொரு பிரெட் துண்டை அதன்மேல் வைத்து மூடி விடவும். பின் ஒரு தவாவில் பட்டர் தடவி தயாராக வைத்துள்ள பிரட்டை சேர்த்து டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான சீஸ் சாண்ட்விச் தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 120kcal | Carbohydrates: 19g | Protein: 5g | Fat: 3g | Sodium: 97mg | Potassium: 70mg | Fiber: 3g | Vitamin A: 3IU | Vitamin C: 17mg | Calcium: 15mg | Iron: 4mg

இதனையும் படியுங்கள் : இரவு உணவுக்கு ஒரு தரம் வெஜ் சீஸ் பாஸ்தா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசி அசத்தலாக இருக்கும்!

Advertisement
Prem Kumar

Recent Posts

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

27 நிமிடங்கள் ago

ருசியான சிறு தானிய சப்பாத்தி இப்படி ட்ரை பண்ணி பாருங்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க!

சிறு தானிய வகைகளில் ஒன்றாக இருக்கும் இந்த கம்பு நிறையவே சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த கம்பு…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 மே 2024!

மேஷம் நீங்கள் முன்னெடுக்கும் பணிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். யாருடனும் வாக்குவாதம்…

4 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

13 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

14 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

16 மணி நேரங்கள் ago