சாண்ட்விச் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. சான்ட்விச் பிடிக்காத குழந்தைகள் இல்லை. சாண்ட்விச் என்றாலே குழந்தைகள் குஷியாகிவிடுவார்கள். அதுவும் காலை பிரேக் ஃபாஸ்ட் சாண்ட்விச் என்றால் இட்லி தோசையிலிருந்து விடுதலை என மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள். இதனால் உங்களுக்கும் சிரமமின்றி வேலை எளிதாக முடிந்துவிடும். இது செய்வதற்கு சுலபமானதும்கூட. பிரேக்பாஸ்டோ, டின்னரோ சுலபமாக ஒரு பிரெட்டில் டேஸ்டியாக சத்தாக முடியும்போது அதையும் அவ்வப்போது செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம்தானே! சாண்ட்விச்சில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் சாண்ட்விச், மட்டன் சாண்ட்விச், வெஜிடபிள் சாண்ட்விச், பன்னீர் சாண்ட்விச், மற்றும் மஷ்ரூம் சாண்ட்விச் பிரபலமானவை. இன்று இங்கு நாம் காண இருப்பது சீஸ் சாண்ட்விச்.
இந்த சீஸ் சாண்ட்விச்சின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெறும் வெங்காயம், தக்காளி, மற்றும் சீஸ் கொண்டு வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமுமின்றி நாம் செய்து விடலாம். மேலும் சமைக்க தெரியாதவர்கள் கூட இந்த சீஸ் சாண்ட்விச்சை வெகு சுலபமாக முதல் முறையிலேயே சரியாக செய்து விடலாம். அது மட்டுமின்றி நம் குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கோ அல்லது அலுவலகங்களுக்கோ கொண்டு செல்ல இவை ஒரு அருமையான லஞ்ச்பாக்ஸ் ரெசிபியும் கூட. சாண்ட்விச் என்றாலே பெரும்பாலும் அதை நாம் கடைகளுக்கு சென்று தான் சாப்பிடுவோம். ஆனால் உங்களுடைய வீட்டில் பிரட் பாக்கெட் இருக்கிறதா, அது போதும் 5 நிமிடத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த சீஸ் சாண்ட்விச் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சீஸ் சாண்ட்விச் | Cheese Sandwich Recipe In Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 குக்கர்
- 1 தவா
தேவையான பொருட்கள்
- 6 பிரெட் துண்டுகள்
- 1/4 கப் சீஸ்
- 1 டேபிள் ஸ்பூன் பட்டர்
- 1 பெரிய உருளைக்கிழங்கு
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 2 டீஸ்பூன் சாட் மசாலா
- புதினா, கொத்தமல்லி சிறிதளவு
- 2 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
- 2 பல் பூண்டு
செய்முறை
- முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- தக்காளி, வெங்காயம், மல்லி இலையை நறுக்கி வைத்துக் கொள்ளவும். சீஸ் துருவி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, பூண்டு சேர்த்து அரைத்து பச்சை சட்னி தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- பின் பிரெட் துண்டுகளில் கிரீன் சட்னி தடவி அதில் வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் சாட் மசாலா, நறுக்கிய தக்காளி, வெங்காயம், மல்லி இலை வைத்து அதன் மேலும் கொஞ்சம் சாட் மசாலா தூள் தூவவும்.
- பின் துருவி வைத்துள்ள சீஸ் தூவி, மற்றொரு பிரெட் துண்டை அதன்மேல் வைத்து மூடி விடவும். பின் ஒரு தவாவில் பட்டர் தடவி தயாராக வைத்துள்ள பிரட்டை சேர்த்து டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான சீஸ் சாண்ட்விச் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இரவு உணவுக்கு ஒரு தரம் வெஜ் சீஸ் பாஸ்தா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசி அசத்தலாக இருக்கும்!