Home சைவம் இரவு உணவுக்கு ஒரு தரம் வெஜ் சீஸ் பாஸ்தா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன்...

இரவு உணவுக்கு ஒரு தரம் வெஜ் சீஸ் பாஸ்தா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசி அசத்தலாக இருக்கும்!

தினமும் இட்லி, தோசை, பூரி,பொங்கல் என செய்து அலுத்து விட்டதா? உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் டிஃபரென்ட்டா எதையாவது செய்யலாம்னு யோசித்தால் அப்போ உங்களுக்கான பதிவா தான் இது இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா பிடிக்குமா?அப்படியென்றால் இன்று உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு சீஸ் பாஸ்தா செய்து கொடுங்கள். இந்த சீஸ் பாஸ்தாவை எப்படி சுலபமாக மற்றும் சுவையாக செய்வது இன்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். பாஸ்தாவின் தாயகமான இத்தாலியில், மூன்று வகைகளில் இது பரிமாறப் பட்டாலும், உலக அளவில் நூற்றுக் கணக்கான வடிவங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்களில் உலா வருகிறது.

-விளம்பரம்-

பெரும்பாலும் மைதா மாவைப் பயன் படுத்தித்தான் பாஸ்தாவும் தயாரிக்கப் படுகிறது. நூடுல்ஸ் போல பாஸ்தாவும் ரிலாக்ஸ் டைமில் இப்போது அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. மிக விரைவாக இது செய்யப்படுவதால் சீக்கிரமாக செய்யப்படும் ஒரு உணவு வகையாக பாஸ்தா இருக்கிறது. நம்மில் பலருக்கு இத்தாலிய உணவு என்றாலே பிசா தான் ஞாபகத்திற்கும் வரும். இங்கே நாம் பிசாவை விட செய்வதற்கு எளிதான, அதே நேரம் சுவையான வெஜ் சீஸ் பாஸ்தா எப்படி செய்வது என்று பார்ப்போம். மாலையில் வீட்டிற்கு போனதும், பசியை ஆரோக்கியமான முறையில் போக்க வேண்டுமானால், மாலை வேளையில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடுவதற்கு ஏற்றவாறான பாஸ்தாவை செய்து சாப்பிடுங்கள்.

அதிலும் பாஸ்தாவை செய்ய ஆரம்பிக்கும் போது, அதில் காய்கறிகள் மற்றும் சீஸ் சேர்த்து செய்தால், பாஸ்தா இன்னும் அருமையாக இருக்கும். பொதுவாக குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது வழக்கம். அப்போது நீங்கள் பாஸ்தா செய்துகொடுப்பீர்கள். தினமும் ஒரே மாதிரியான சுவையில் செய்துகொடுத்தால் பாஸ்தா சாப்பிடுவது பிடிக்காமல் போய்விடும். அதனால் இது போல் பாஸ்தா செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு பிடிக்காமல் போகாது..!

Print
4.67 from 3 votes

வெஜ் சீஸ் பாஸ்தா | veg cheese pasta recipe in tamil

தினமும் இட்லி, தோசை, பூரி,பொங்கல் என செய்து அலுத்து விட்டதா? உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் டிஃபரென்ட்டா எதையாவது செய்யலாம்னு யோசித்தால் அப்போ உங்களுக்கான பதிவா தான் இது இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா பிடிக்குமா?அப்படியென்றால் இன்று உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு சீஸ் பாஸ்தா செய்து கொடுங்கள். மிக விரைவாக இது செய்யப்படுவதால் சீக்கிரமாக செய்யப்படும் ஒரு உணவு வகையாக பாஸ்தா இருக்கிறது. நம்மில் பலருக்கு இத்தாலிய உணவு என்றாலே பிசா தான் ஞாபகத்திற்கும் வரும். இங்கே நாம் பிசாவை விட செய்வதற்கு எளிதான, அதே நேரம் சுவையான வெஜ் சீஸ் பாஸ்தா எப்படி செய்வது என்று பார்ப்போம். மாலையில் வீட்டிற்கு போனதும், பசியை ஆரோக்கியமான முறையில் போக்க வேண்டுமானால், மாலை வேளையில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடுவதற்கு ஏற்றவாறான பாஸ்தாவை செய்து சாப்பிடுங்கள். அதிலும் பாஸ்தாவை செய்ய ஆரம்பிக்கும் போது, அதில் காய்கறிகள் மற்றும் சீஸ் சேர்த்து செய்தால், பாஸ்தா இன்னும் அருமையாக இருக்கும்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: evening
Cuisine: Italian
Keyword: veg cheese pasta
Yield: 3 People
Calories: 75kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 200 கி பாஸ்தா
  • 1 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  • 1 கப் பால்
  • 1 கேரட்
  • 1 குடைமிளகாய்
  • 1/2 கப் வெங்காயத் தாள்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீஸ்பூன் நெய்
  • உப்பு தேவையான அளவு                            
  • 1 கப் சீஸ்

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து இதனுடன் பாஸ்தாவை வேக வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் பாஸ்தா வெந்ததும் அதனை எடுத்து தண்ணீரை வடித்து குளிர்ந்த நீர் ஊற்றி ஆறவிடவும்.
  • ஒயிட் சாஸ் செய்ய ஒரு‌ கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய், மைதா மாவு சேர்த்து மிதமாக வறுக்கவும்.
  • பின்னர் இதில் பால் ஊற்றி கெட்டியானதும், அதில் சீஸ் சேர்த்து சாஸ் போல் செய்து கொள்ளவும்.
  • மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து அனைத்து காய்கறிகளையும் மிதமான தீயில் வைத்து சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  • அதன்பிறகு ஒயிட் சாஸ் கலவையில், வேக வைத்த பாஸ்தா, வதக்கிய காய்கறிகள், மிளகுத்தூள் சேர்த்து ஒன்றாக கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான வெஜ் சாஸ் பாஸ்தா தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 75kcal | Carbohydrates: 2.1g | Protein: 7.7g | Fat: 6.3g | Saturated Fat: 4g | Sodium: 269mg | Potassium: 30mg | Sugar: 1.3g | Calcium: 80mg | Iron: 0.7mg