செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் சூப் இப்படி செய்து பாருங்கள் இதன் சுவையும் மணமும் பிரமாதமாக இருக்கும்!!!
சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் உணவில் சூப்பை அதிகம் சேர்த்துக் கொள்வது, எதிர்பார்த்த பலனை விரைவில் பெற உதவி புரியும். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால், குறிப்பாக சிக்கன் பிடிக்குமானால், சிக்கனைக் கொண்டு சூப் செய்து குடிக்கலாம். இ
சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் உணவில் சூப்பை அதிகம் சேர்த்துக் கொள்வது, எதிர்பார்த்த பலனை விரைவில் பெற உதவி புரியும். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால், குறிப்பாக சிக்கன் பிடிக்குமானால், சிக்கனைக் கொண்டு சூப் செய்து குடிக்கலாம். இது மிகவும் ருசியாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. நீங்கள் இதுவரை கடைகளில் தான் சிக்கன் சூப் வாங்கி குடித்துள்ளீர்களா? வீட்டிலேயே சிக்கன் சூப் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான்.
வீட்டில் உள்ளவர்களுக்கு ஜலதோஷம், காய்ச்சல், இருமல், தொண்டை புண் போன்ற சில பிரச்சனைகள் இருக்கும் போது நாம் சூப் போன்றவை செய்து பருகினால் கொஞ்சம் ரீலீஃப் கிடைக்கும். சூப்பில் மட்டன் சூப், சிக்கன் சூப், வெஜ் சூப், மஷ்ரூம் சூப், கார்ன் சூப் என்று பல விதமான சூப்களை செய்யலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சுவையாக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் செட்டிநாடு சிக்கன் சூப் செய்முறையை காண உள்ளோம். சிக்கனில் சூப் செய்து சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைகிறது.
அதாவது சூப்பில் உள்ள சிக்கனை நீக்கிவிட்டு வெறும் சாற்றினை மட்டும் அருந்த வேண்டும். இவ்வாறு சிக்கன் சூப்பை அருந்தி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைவதோடு உடலிற்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது. இந்த சிக்கன் சூப்பினை செட்டிநாடு ஸ்டைலில் செய்ய உள்ளதால் இதன் சுவை சற்று தூக்கலாக இருக்கும். இதனை ஒரு முறை செய்தால் அடிக்கடி செய்யுமாறு வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள். இதனை செய்யும் போதே வீட்டில் உள்ள அனைவரும் எப்போது அருந்த கொடுப்பீர்கள் என்று கேட்கும் அளவிற்கு இதன் மணம் இருக்கும்.
இதனையும் படியுங்கள் : சுவையான கொங்கு நாட்டு சிக்கன் கிரேவி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!!