Advertisement
அசைவம்

ருசியான மதுரை சிக்கன் கோலா உருண்டை குழம்பு இப்படி செய்து பாருங்க! வீட்டிலே செய்து பாருங்க!

Advertisement

பொதுவாக மட்டன் கோலா உருண்டை குழம்பு செய்வது வழக்கம். ஆனால் சிக்கனிலும் உருண்டை குழம்பு செய்யலாம். சிக்கனில் எப்பொழுதும் சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், சிக்கன் 65 போன்றுதான் வீட்டில் செய்வோம்.

இதையும் படியுங்கள் : மிருதுவான மதுரை மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி ?

Advertisement

இந்த வார இறுதியில் ஒரு முறை இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க.

சிக்கன் கோலா உருண்டை குழம்பு | Chicken Kola Urundai Kuzhambu Recipe In Tamil

Print Recipe
பொதுவாக மட்டன் கோலா உருண்டை குழம்பு செய்வது வழக்கம். ஆனால் சிக்கனிலும் உருண்டை குழம்பு செய்யலாம். சிக்கனில் எப்பொழுதும் சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், சிக்கன் 65 போன்றுதான் வீட்டில் செய்வோம்.இந்த வார இறுதியில் ஒரு முறை இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Chicken, சிக்கன்
Prep Time 10 minutes
Cook Time 30 minutes
Total Time 40 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

உருண்டைக்கு தேவையானவை:

  • ½ கிலோ எலும்பில்லாத சிக்கன்
  • 1 ஸ்பூன் சோம்பு தூள்
  • ½ ஸ்பூன் கரம் மசாலா
  • ½ ஸ்பூன் மிளகாய் தூள்
  • ¼ ஸ்பூன் மல்லித்தூள்
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • கொத்தமல்லி தலை சிறிதளவு
  • புதினா கொஞ்சம்
  • உப்பு தேவையான அளவு

குழம்பிற்கு தேவையான பொருள்:

  • 3 ஸ்பூன் எண்ணெய்
  • 1 பிரியாணி இலை
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 3 தக்காளி அரைத்து வைத்தது
  • ½ ஸ்பூன் கரம் மசாலா
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மல்லித்தூள்
  • 1 கப் தேங்காய் பால்
  • ½ ஸ்பூன் மிளகு தூள்
  • உப்பு தேவையான அளவு

Instructions

உருண்டை செய்வது:

  • முதலில் எலும்பில்லாத சிக்கனை நன்றாகக் கழுவி மிக்சியில் போட்டு அரைத்து வைக்கவும் பிறகு உருண்டைக்கு தேவையான பொருட்களை அனைத்தையும் போட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக செய்து தனியாக எடுத்து வைக்கவும்.

குழம்பு செய்வது:

  • பிறகு ஒரு கடையாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, இலவங்கம், ஸ்டார் பூ, சேர்த்து வதக்கி நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  • நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து தாள்களின் பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கி விடவும்.
  • பிறகு தக்காளி வதங்கிய பிறகு, கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து வதக்கி விடவும்.
  • வதங்கியதும் அதில் தேங்காய் பால் சேர்த்து ½ தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஏற்கனவே அரைத்து உருண்டை பிடித்த சிக்கன் உருண்டைகளை சேர்த்து 15 நிமிடம் நன்றாக கொதிக்கவிடவும்.
  • கொதித்த பிறகு மிளகு தூள், நறுக்கிய கொத்தமல்லி தலைகளை சேர்த்து இறக்கவும்.
  • இப்பொழுது சிக்கன் கோலா உருண்டை குழம்பு தயார்.

Nutrition

Protein: 2.52g | Fat: 2.23g | Saturated Fat: 0.42g | Sodium: 8.65mg | Vitamin A: 27.58IU | Vitamin C: 8.1mg | Calcium: 64.36mg | Iron: 3.35mg
Advertisement
swetha

Recent Posts

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

27 seconds ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

8 நிமிடங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

32 நிமிடங்கள் ago

வீட்டிலயே செய்யாலம் சுவையான மேங்கோ கஸ்டர்ட் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!

மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும்…

2 மணி நேரங்கள் ago

சூரியனின் அருளைப் பெற அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்ய வேண்டும்?

கிரகங்களில் முதன்மையான கிரகமாக சூரிய பகவான் கருதப்படுகிறார். எனவே, அனைத்து வழிபாடுகளிலும் சூரிய பகவானை வழிபடும் முறையை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி…

3 மணி நேரங்கள் ago

கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற…

4 மணி நேரங்கள் ago