- Advertisement -
அசத்தலான சுவையில் சிக்கன் பன்னீர் கிலாபி கட்லெட் அனைத்து வகையான விருந்துக்கும் ஒரு அருமையான ஸ்டார்டர். சிக்கன் மற்றும் பன்னீர் ஒன்றாக சேர்த்து மென்மையான, சுவையான கட்லெட்டை தயாரிக்கலாம். மசாலா பொருட்களுடன் சேர்த்து செய்யப்படும் இந்த கட்லெட் எளிதாக நாவில் கரையக் கூடியதாக இருக்கும். இந்த கட்லெட் வித்தியாசமான தனி சுவையைக் கொடுக்கும்.
இதையும் படியுங்கள் : அட்டகாசமான சுவையில் ராஜ்மா கட்லெட் இப்படி செய்து பாருங்க!
- Advertisement -
இந்த சிக்கன் நூடுல்ஸ் கட்லெட்டில் நூடூல்ஸில் பனீர், சிக்கன் போன்றவைகள் சிறிது சிறிதாக நறுக்கி போடப்பட்டிருப்பதால் அதன் சுவை அதிகமாகவே இருக்கும். அதனால் இன்று இந்த சிக்கன் பன்னீர் கிலாபி கட்லெட் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
சிக்கன் பன்னீர் கட்லெட் | Chicken Paneer Cutlet Recipe in Tamil
அசத்தலான சுவையில் சிக்கன் பன்னீர் கிலாபி கட்லெட் அனைத்து வகையான விருந்துக்கும் ஒரு அருமையான ஸ்டார்டர். சிக்கன் மற்றும் பன்னீர் ஒன்றாக சேர்த்து மென்மையான, சுவையான கட்லெட்டை தயாரிக்கலாம். மசாலா பொருட்களுடன் சேர்த்து செய்யப்படும் இந்த கட்லெட் எளிதாக நாவில் கரையக் கூடியதாக இருக்கும். இந்த கட்லெட் வித்தியாசமான தனி சுவையைக் கொடுக்கும். இந்த சிக்கன் நூடுல்ஸ் கட்லெட்டில் நூடூல்ஸில் பனீர், சிக்கன் போன்றவைகள் சிறிது சிறிதாக நறுக்கி போடப்பட்டிருப்பதால் அதன் சுவை அதிகமாகவே இருக்கும்.
Yield: 4 People
Calories: 80kcal
Equipment
- 1 மிக்ஸி
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 250 கிராம் சிக்கன் எலும்பில்லாதது
- 200 கிராம் பன்னீர்
- 4 பெரிய வெங்காயம் நறுக்கியது
- 4 பச்சை மிளகாய் நறுக்கியது
- 50 கிராம் கொத்தமல்லி
- 50 கிராம் சோள மாவு
- 2 Tsp கரம் மசாலா
- 2 Tbsp இஞ்சி பூண்டு விழுது
- 1 Tsp மிளகாய் பொடி
- 1/4 Tsp மஞ்சள் தூள்
- 1 Tsp கொத்தமல்லி பொடி
- எள் விதை தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் பனீர் எடுத்து அதனை மஞ்சள் தூள், மிகளாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்க வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் சிக்கன் சேர்த்து, வெங்காயம், பொடியாக நறுக்கிய மிளகாய், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சிறிது மிளகாய் தூள் சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் ஒரு பேஸ்ட் போல் அரைத்து வைக்க வேண்டும்.
- பின்னர் மற்றொரு பாத்திரத்தில் அரைத்த சிக்கன் பேஸ்டை எடுத்து, நறுக்கிய கொத்தமல்லி இலைகள், சோள மாவு, எள்மற்றும் சிறிது உப்பு சேர்த்து அனைத்து பொருட்களையும் ஒன்று சேரும்படி நன்றாகக் கலந்து விட வேண்டும்.
- பிறகு மசாலா கலந்து வைத்த பனீர் துண்டுகளை எடுத்து சிக்கன் பேஸ்டில் நன்கு கலந்து அதனை சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்து எடுக்க வேண்டும்.
- பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரிக்க வேண்டும். இல்லாவிட்டால் மேல்புறம் வெந்து உள்ளே வேகாமல் இருக்கும்.
- எண்ணெயில் பொரிப்பது பிடிக்கவில்லை என்றால், தவாவில் போட்டும் இரண்டு புறமும் வேகும்படி நன்கு சுட்டு எடுக்கவும். இப்போது சுவையான சிக்கன் பனீர் கிலாபி கட்லெட் தயார்.
Nutrition
Serving: 600G | Calories: 80kcal | Carbohydrates: 38g | Protein: 13g | Fat: 1.6g | Saturated Fat: 0.1g | Cholesterol: 1.1mg | Sodium: 2.1mg | Potassium: 281mg | Fiber: 1g | Sugar: 0.5g | Iron: 0.8mg