- Advertisement -
குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இந்த ஹெல்தியான ராஜ்மா கட்லெட் செய்து பாருங்க அப்றம் மீண்டும் மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள் ஏனென்றால் இந்த ராஜ்மா கட்லெட் அட்டகாசமான சுவையில் மொறு மொறுனு இருக்கும்.
கட்லெட் என்றாலே இப்பொழுதெல்லாம் எல்லோருக்கும் பிடித்த ஸ்னாக்சில் ஒன்று தான். அதனால் கடைகளில் போய்தான் சாப்பிடுவாங்க அதுவும் உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை அதனால் இனி கவலை வேண்டாம் இனி நாம் வீட்டிலேயே எப்படி சுலபமாகவும், சுவையாகவும் கட்லெட் செய்வது என்றுதான் பார்க்கப்போகிறோம்.
- Advertisement -
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
-விளம்பரம்-
ராஜ்மா கட்லெட் | Rajma Cutlet Recipe In Tamil
குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இந்த ஹெல்தியான ராஜ்மா கட்லெட் செய்து பாருங்க அப்றம் மீண்டும் மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள் ஏனென்றால் இந்த ராஜ்மா கட்லெட் அட்டகாசமான சுவையில் மொறு மொறுனு இருக்கும். கட்லெட் என்றாலே இப்பொழுதெல்லாம் எல்லோருக்கும் பிடித்த ஸ்னாக்சில் ஒன்று தான். அதனால் கடைகளில் போய்தான் சாப்பிடுவாங்க அதுவும் உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை அதனால் இனி கவலை வேண்டாம் இனி நாம் வீட்டிலேயே எப்படி சுலபமாகவும், சுவையாகவும் கட்லெட் செய்வது என்றுதான் பார்க்கப்போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Yield: 4 people
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
- மிக்ஸி
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- 1 கப் ராஜ்மா
- 1 துண்டு இஞ்சி
- 4 பற்கள் பூண்டு
- 3 பச்சை மிளகாய்
- ½ ஸ்பூன் சீரகம்
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
- ½ ஸ்பூன் சாட் மசாலா
- 1 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் போடி
- உப்பு தேவைக்கேற்ப
- 1 பெரிய உருளைக்கிழங்கு
- கொத்தமல்லி சிறிதளவு
- புதினா சிறிதளவு
- ½ ஸ்பூன் எலுமிச்சை சாறு
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 நெய் நெய்
செய்முறை
செய்முறை:
- முதலில் ராஜ்மாவை இரவு ஊறவைக்கவும். பிறகு மறுநாள் குக்கரில் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து 4 விசில் வரைக்கும் வேகவைக்கவேண்டும்.
- பின் அதை மிக்சியில் ஒன்றும் பாதியாக அரைத்துக்கொள்ளவும்.
- உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக்கொள்ளவும். அடுத்து கொத்தமல்லி, பெரியவெங்காயம், இஞ்சி பூண்டு, பச்சைமிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
- பிறகு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சீரகம் போட்டு தாளித்தவுடன், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
- அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அடுத்து காஸ்மீர் மிளகாய் தூள், சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், சேர்த்து வதக்கவும் .
- அடுத்து அரைத்த ராஜ்மாவை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை நிறுத்திவிட்டு மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி தழை, புதினா, எலுமிச்சை சாறு, சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளுகள்.
- பிசைந்ததும் கைகளில் எலுமிச்சை அளவு உருண்டை எடுத்துக்கொண்டு கட்லெட் போல் கைகளில் வைத்து தட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். மீண்டும் அடுப்பில் வைத்து தவா வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும் செய்து வாய்த்த கட்லெட்டை போட்டு இரு புறமும் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
- அவளவுதான் சுவையான ராஜ்மா கட்லெட் தயார்.
Nutrition
Carbohydrates: 28g | Protein: 9.5g | Fat: 9.1g | Cholesterol: 4mg | Sodium: 34.5mg | Potassium: 635mg | Fiber: 2.7g | Calcium: 136.9mg | Iron: 2.4mg