சிக்கன் ரசம் வார இறுதியில் காரசாரமாக இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
சாம்பார், புளிக்குழம்பு என சாப்பிட்டு அலுத்து போனாலும் சரி, தயிர் சாதமே சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கும் சரி, சமைக்க நீண்ட நேரம் இல்லையென்றாலும் சரி. அனைவரும் சட்டென செய்ய நினைப்பது ரசம் தான். நாம் என்னதான் ஏகபோக ருசியுடன் சமைத்து சாப்பிட்டாலும், நிறைவாக ரசம் வைத்து சாப்பிட்டால
சாம்பார், புளிக்குழம்பு என சாப்பிட்டு அலுத்து போனாலும் சரி, தயிர் சாதமே சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கும் சரி, சமைக்க நீண்ட நேரம் இல்லையென்றாலும் சரி. அனைவரும் சட்டென செய்ய நினைப்பது ரசம் தான். நாம் என்னதான் ஏகபோக ருசியுடன் சமைத்து சாப்பிட்டாலும், நிறைவாக ரசம் வைத்து சாப்பிட்டால் தான் சிலருக்கு சாப்பிட்ட திருப்தியே இருக்கும். ரசம் என்பது தென்னிந்திய மக்களின் உணவு வகைகளில் மிகவும் முக்கியமான ரெசிபி ஆகும். இதை எல்லா தருணங்களிலும் பொதுவாக எல்லா வீடுகளிலும் இதைச் செய்து மகிழ்வர்.
ரசம் என்பது காரமான சுவையுடன் நாக்கை சொட்டை போடச் செய்யும் புளிப்பு சுவையுடன் இருக்கும். இதை அப்படியே சுடச்சுட உள்ள சாதத்தில் ஊற்றி சாப்பிடும் போது இதன் சுவையே தனி தான். ரசமானது நாம் உண்ணும் உணவை எளிதில் செரிமானம் செய்வதற்கு பெரிதும் துணை புரிகிறது. ரசத்தில் புதினா ரசம், லெமன் ரசம், தக்காளி ரசம், நண்டு ரசம் என்று பல விதமான ரசம் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த வகையில் எந்த சிரமமும் இல்லாமல் சிக்கன் வைத்து செய்யும் சிக்கன் ரசம் செய்து சாப்பிட்டதுண்டா?
இல்லையெனில் ஒரு முறை இந்த ரசத்தை செய்து பாருங்கள் இது ரசங்களை விட வித்தியாசமான சுவையுடன் அமிர்தத்தை போல இருக்கும். வீட்டில் உள்ளவர்கள் ஒரு முறை செய்து கொடுத்தால் மீண்டும் மீண்டும் என கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். எப்போதும் சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், கிரேவி என்று செய்யாமல் நீங்கள் ரசப் பிரியர் என்றால், ஒருமுறை இந்த ரசத்தை செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். இப்போது சுவையான சிக்கன் ரசம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : சிக்கன் உப்பு கறி இந்த மாதிரி செஞ்சு பாருங்க நாக்குல எச்சி ஊறும்!!