காலை உணவிற்கு பிரெட்டுடன் சேர்த்து சாப்பிட ருசியான கொண்டைக்கடலை பிரெட் மசாலா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
தினமும் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்ய வேண்டுமா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். உங்கள் வீட்டில் கொண்டைக்கடலை உள்ளதா
தினமும் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்ய வேண்டுமா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். உங்கள் வீட்டில் கொண்டைக்கடலை உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு கொண்டைக்கடலை பிரெட் மசாலா செய்யுங்கள். உங்கள் குழந்தைகள் காலை உணவிற்கு பிரெட் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் என்றால் அதற்கு இந்த கொண்டைக்கடலை பிரெட் மசாலா வைத்து கொடுங்கள்.
இந்த கொண்டைக்கடலை மசாலா செய்வது மிகவும் ஈஸி. முக்கியமாக இது பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். குழந்தைகளுக்கு நல்ல சுவையான மற்றும் ஆரோக்கியமான அதே நேரத்தில் அவர்கள் விரும்பும் படியான காலை உணவு செய்து கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அவர்களுக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்ய வேண்டியிருக்கும். அந்த வகையில் கொண்டைக்கடலையில் புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, இரும்பு சத்து மற்றும் மக்னீஷியம் இருக்கிறது.
இவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். பெரும்பாலும் இந்த கொண்டைக்கடலையை குழந்தைகள் அவ்வளவாக விரும்பி சாப்பிடுவது கிடையாது. இதில் சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆனாலும் இதை குழந்தைகள் அதிகம் உண்பதில்லை. அதனால் இந்த கொண்டைக்கடலையில் ருசியான மசாலா செய்து அதனுடன் பிரெட் சாப்பிட கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான கொண்டைக்கடலை பிரெட் மசாலா எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : மசாலா கொண்டைக்கடலை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அட்டகாசமா இருக்கும்!!