மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான கொண்டைக்கடலை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அசத்தலான ஸ்நாக்ஸ் ரெசிபி!
உங்கள் வீட்டில் உள்ளோர் மாலை வேளையில் நல்ல சுவையான ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க சொல்கிறார்களா? என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இருப்போர் கட்லெட்டுகளை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் கொண்டைக்கடலை இருந்தால் அவற்றைக் கொண்டு சுவையான கட்ல
உங்கள் வீட்டில் உள்ளோர் மாலை வேளையில் நல்ல சுவையான ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க சொல்கிறார்களா? என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இருப்போர் கட்லெட்டுகளை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் கொண்டைக்கடலை இருந்தால் அவற்றைக் கொண்டு சுவையான கட்லெட் செய்து கொடுங்கள். இந்த கட்லெட் செய்வது மிகவும் ஈஸி. முக்கியமாக இது பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். குழந்தைகளுக்கு நல்ல சுவையான அதே நேரத்தில் அவர்கள் விரும்பும் படியான ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.
கொண்டைக்கடலையில் புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, இரும்பு சத்து மற்றும் மக்னீஷியம் இருக்கிறது. இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். பெரும்பாலும் இந்த கொண்டைக்கடலையை குழந்தைகள் அவ்வளவாக விரும்பி சாப்பிடுவது கிடையாது. இதில் சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆனாலும் இந்த உணவு குழந்தைகள் அதிகம் உண்பதில்லை. கொண்டைக்கடலையில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், குழந்தைகளுக்கு கொண்டைக்கடலையை அதிகம் கொடுப்பது நல்லது.
இதை குழந்தைகளுக்கு பிடித்த உணவான கட்லெட்டாக செய்து கொடுத்தால் நல்லது தானே. அப்படி ஒரு சுவையான கொண்டைக்கடலை கட்லெட்டை தான் இப்போது இந்த பதிவில் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள போகிறோம். கொண்டைக்கடலையை வைத்து நம்முடைய வீடுகளில் எப்போதும் சுண்டல் அல்லது குழம்பு தான் வைப்போம். கொஞ்சம் வித்தியாசமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அளவிற்கு கொண்டைக்கடலை கட்லெட்டை செய்யலாம். இன்று கொண்டைக்கடலையில் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கறி குழம்பு சுவையில் கொண்டைக்கடலை குருமா இப்படி கூட செய்து பாருங்க! இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி என்று எல்லாத்துக்குமே அருமையாக இருக்கும்!