- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- evening, snacks
உங்கள் வீட்டில் உள்ளோர் மாலை வேளையில் நல்ல சுவையான ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க சொல்கிறார்களா? என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இருப்போர் கட்லெட்டுகளை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் கொண்டைக்கடலை இருந்தால் அவற்றைக் கொண்டு சுவையான கட்லெட் செய்து கொடுங்கள். இந்த கட்லெட் செய்வது மிகவும் ஈஸி. முக்கியமாக இது பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். குழந்தைகளுக்கு நல்ல சுவையான அதே நேரத்தில் அவர்கள் விரும்பும் படியான ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.
கொண்டைக்கடலையில் புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, இரும்பு சத்து மற்றும் மக்னீஷியம் இருக்கிறது. இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். பெரும்பாலும் இந்த கொண்டைக்கடலையை குழந்தைகள் அவ்வளவாக விரும்பி சாப்பிடுவது கிடையாது. இதில் சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆனாலும் இந்த உணவு குழந்தைகள் அதிகம் உண்பதில்லை. கொண்டைக்கடலையில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், குழந்தைகளுக்கு கொண்டைக்கடலையை அதிகம் கொடுப்பது நல்லது.
இதை குழந்தைகளுக்கு பிடித்த உணவான கட்லெட்டாக செய்து கொடுத்தால் நல்லது தானே. அப்படி ஒரு சுவையான கொண்டைக்கடலை கட்லெட்டை தான் இப்போது இந்த பதிவில் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள போகிறோம். கொண்டைக்கடலையை வைத்து நம்முடைய வீடுகளில் எப்போதும் சுண்டல் அல்லது குழம்பு தான் வைப்போம். கொஞ்சம் வித்தியாசமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அளவிற்கு கொண்டைக்கடலை கட்லெட்டை செய்யலாம். இன்று கொண்டைக்கடலையில் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கறி குழம்பு சுவையில் கொண்டைக்கடலை குருமா இப்படி கூட செய்து பாருங்க! இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி என்று எல்லாத்துக்குமே அருமையாக இருக்கும்!
Ingredients
Method
முதலில் கொண்டைக்கடலை இரவு முழுவதும் ஊற வைத்து அதனை குக்கரில் சேர்த்து நான்கு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் வேகவைத்த கொண்டைக்கடலையை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
ஒரு பவுளில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, அரைத்த கொண்டைக்கடலை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், அரிசிமாவு, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கட்லெட்டை சேர்த்து இரண்டு பக்கமும் நன்றாக வேக விட்டு எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கொண்டைக்கடலை கட்லெட் தயார்.






