கறி குழம்பு சுவையில் கொண்டைக்கடலை குருமா இப்படி கூட செய்து பாருங்க! இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி என்று எல்லாத்துக்குமே அருமையாக இருக்கும்!

- Advertisement -

வெறும் சாதத்தில் இருந்து பிரியாணி வரைக்கும் ஊத்தி சாப்பிடக்கூடிய இந்த கொண்டைக்கடலை குருமா ரொம்பவே அருமையா இருக்கும். ஒரே மாதிரியான குழம்பு வச்சு போர் அடிச்சவங்க இந்த மாதிரி ட்ரை பண்ணி பார்க்கலாம். பொதுவா சுண்டல் பட்டாணி போன்ற பயிர் வகைகள் உடம்புக்கு ரொம்பவே நல்லது. குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. தனியா வேக வச்சு கொடுத்தா சில குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க.

-விளம்பரம்-

அது ஏன் நம்ம கொஞ்சம் டிஃபரண்டா அவங்களுக்கு புடிச்ச மாதிரி செஞ்சு கொடுத்தா ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. சின்ன குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவங்களுக்கும் இந்த கொண்டைக்கடலை ரொம்பவே ஆரோக்கியமானது. நம்ம அன்றாட வாழ்க்கையில சுவைக்காக மட்டுமில்லாமல் ஆரோக்கியத்துக்காகவும் சாப்பிட்டு தான் ஆகணும். ஏன்னா உணவு தான் மருந்து அப்படின்னு சொல்லுவாங்க.

- Advertisement -

அந்த வகையில நம்ம இந்த மாதிரியான பயறு வகைகளை அடிக்கடி உணவுல கண்டிப்பா சேர்த்துக்கணும். சாதத்துக்கு மட்டுமில்லாம இட்லி தோசை சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்கும் சாப்பிட ரொம்பவே சுவையா இருக்கும். இந்த அருமையான கொண்டைக்கடலை குருமா எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

Print
3 from 2 votes

கொண்டைக்கடலை குருமா | Chickpeas Kuruma In Tamil

வெறும் சாதத்தில் இருந்து பிரியாணி வரைக்கும் ஊத்தி சாப்பிடக்கூடிய இந்த கொண்டைக்கடலை குருமா ரொம்பவே அருமையா இருக்கும். ஒரே மாதிரியான குழம்பு வச்சு போர் அடிச்சவங்க இந்த மாதிரி ட்ரை பண்ணி பார்க்கலாம். பொதுவா சுண்டல் பட்டாணி போன்ற பயிர் வகைகள் உடம்புக்கு ரொம்பவே நல்லது. குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. தனியா வேக வச்சு கொடுத்தா சில குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: KURUMA
Cuisine: tamil nadu
Keyword: Chick peas Kuruma
Yield: 4
Calories: 91kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் வெள்ளை சுண்டல்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லித்தூள்
  • 2 டீஸ்பூன் கரம் மசாலா
  • தண்ணீர் தேவையான அளவு
  • 1/2 மூடி தேங்காய்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் கசகசா
  • உப்பு தேவையான அளவு
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 பிரியாணி இலை
  • 1 நட்சத்திர சோம்பு
  • 5 முந்திரி
  • 2 பச்சை மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • கருவேப்பிலை தேவையான அளவு
  • மல்லி இலைகள் தேவையான அளவு

செய்முறை

  • முதலில்சுண்டலை 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவேண்டும். அதனை ஒரு குக்கரில் சேர்த்து உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் முந்திரி சோம்பு மற்றும் கசகசா சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி பட்டை ,கிராம்பு, நட்சத்திர சோம்பு, பிரியாணி இலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்த உடன் பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயத்துடன் சேர்த்து கருவேப்பிலையும் போட்டுக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை ஒதுக்கிவிட்டு பிறகு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின்பு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். நன்கு எளிய பின்பு சுண்டல் வேக வைத்த தண்ணீருடன் சுண்டலை சேர்த்துக் கொள்ளவும்
  • இப்பொழுது அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து கலந்து பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.. நன்றாக கொதித்த பின்பு மல்லி இலைகளை போட்டு இறக்கினால் அருமையான கொண்டைக்கடலை குருமா தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Fiber: 4g

இதையும் படியுங்கள் : ருசியான பீட்ரூட் குருமா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! சப்பாத்திக்கு பூரிக்கு அருமையான ரெசிபி மிஸ் பண்ணாதீங்க!