ருசியான பீட்ரூட் குருமா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! சப்பாத்திக்கு பூரிக்கு அருமையான ரெசிபி மிஸ் பண்ணாதீங்க!

- Advertisement -

இந்நாள் குழந்தைகளிடம் தங்களுக்கு பிடித்த உணவு என்னவென்று கேட்டால் நூடுல்ஸ், பீட்சா, பாஸ்தா, குல்ச்சா என்று ஒரு பெரிய பட்டியலே அடுக்குவார்கள். ஆனால், 80ஸ் கிட்ஸ் & 90ஸ் கிட்ஸிடம் பிடித்தமான உணவு பற்றிக் கேட்டால் முதலில் சொல்வது சப்பாத்தியும் குருமாவும்தான். சப்பாத்திக்கு அருமையான சைடு டிஷ் குருமா தான். அதில் பலரும் சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு குருமாவைத் தான் செய்து சுவைப்பார்கள். ஆனால் பீட்ரூட் குருமாவிற்கு இணை வர முடியாது. ஏனெனில் பீட்ரூட் குருமாவின் சுவையே தனி.

-விளம்பரம்-

பொதுவாக இனிப்பை விரும்பி சாப்பிடுவார்களுக்கு பீட்ரூட் பிடிப்பதில்லை. ஆனால், நமது உடலுக்கு பீட்ரூட் தரும்‌ நன்மைகள் அளவிட முடியாதது. பீட்ரூட் நமது ஊர்களில் மலிவான விலையில் கிடைக்கும் காய்கறியில் ஒன்று ஆகும். இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது மற்றும் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கின்றது. இதய நோய் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பீட்ரூட், டிமென்ஷியா எனும் மூளை சம்பந்தமான பிரச்சனைக்கும் தீர்வு தருகின்றது. மேலும் உடல் எடைப் பிரச்சினை உடையவர்களுக்கு எடையை சரியான அளவு பராமரிக்க உதவுகிறது.

- Advertisement -

பீட்ரூடில் புற்றுநோயை தடுக்கும் அளவுக்கு சத்துக்கள் அடங்கியுள்ளன என சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றனர். இதில் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி வகைகளை சேர்த்து சமைப்பதால் ஆரோக்கியமான உணவு என்பதால் வாரம் ஒரு முறையேனும் குருமா குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த பீட்ரூடில் குருமா செய்து அசத்துங்கள். பீட்ரூடை வெறுப்பவர்கள் கூட‌ இதனை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த அற்புதமான பீட்ரூடில் சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி என உங்களுக்கு விருப்பமான காலை உணவுகளுக்கு ஏற்ற குருமா எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.

Print
4.50 from 2 votes

பீட்ரூட் குருமா | Beetroot Kurma Recipe In Tamil

இந்நாள் குழந்தைகளிடம் தங்களுக்கு பிடித்த உணவு என்னவென்று கேட்டால் நூடுல்ஸ், பீட்சா, பாஸ்தா, குல்ச்சா என்று ஒரு பெரிய பட்டியலே அடுக்குவார்கள். ஆனால், 80ஸ் கிட்ஸ் & 90ஸ் கிட்ஸிடம் பிடித்தமான உணவு பற்றிக் கேட்டால் முதலில் சொல்வது சப்பாத்தியும் குருமாவும்தான். சப்பாத்திக்கு அருமையான சைடு டிஷ் குருமா தான். அதில் பலரும் சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு குருமாவைத் தான் செய்து சுவைப்பார்கள். ஆனால் பீட்ரூட் குருமாவிற்கு இணை வர முடியாது. ஏனெனில் பீட்ரூட் குருமாவின் சுவையே தனி. பொதுவாக இனிப்பை விரும்பி சாப்பிடுவார்களுக்கு பீட்ரூட் பிடிப்பதில்லை. ஆனால், நமது உடலுக்கு பீட்ரூட் தரும்‌ நன்மைகள் அளவிட முடியாதது. இதில் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி வகைகளை சேர்த்து சமைப்பதால் ஆரோக்கியமான உணவு என்பதால் வாரம் ஒரு முறையேனும் குருமா குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த பீட்ரூடில் குருமா செய்து அசத்துங்கள். பீட்ரூடை வெறுப்பவர்கள் கூட‌ இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: beetroot kuruma
Yield: 4 People
Calories: 58kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1/4 கி பீட்ரூட்
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 துண்டு தேங்காய்
  • 2 தக்காளி
  • உப்பு தேவையான அளவு
  • கடலை எண்ணெய் தேவையான அளவு
  • கொத்தமல்லி இலை சிறிதளவு

செய்முறை

  • முதலில் பீட்ரூட்டை கழுவி தோல் சீவி துண்டுகளாக நறுக்கி‌ வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு‌ குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொரகொரப்பாக அரைத்த‌ வெங்காயத்தை சேர்க்கவும். பின் இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  • பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு வதக்கவும்.
  • இதில் நறுக்கிய பீட்ரூட்டை சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் எண்ணெய் பிரிந்து வர வதக்கவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், தக்காளியை சேர்த்து விழுதாக அரைத்து குருமாவுடன் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில்‌ விடவும்.
  • இறுதியில் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறவும். இது சாதம் சப்பாத்தி இட்லி தோசை எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்ரூட் குருமா தயார்.

Nutrition

Serving: 350g | Calories: 58kcal | Carbohydrates: 13g | Protein: 8.1g | Fat: 1.5g | Sodium: 78mg | Potassium: 375mg | Fiber: 3.8g | Vitamin A: 3IU | Vitamin C: 4.9mg | Calcium: 16mg | Iron: 0.8mg

இதனையும் படியுங்கள் : மணக்க மணக்க ருசியான மொச்சை குருமா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! சுட சுட சாதத்துடன் போட்டு சாப்பிட பக்காவான ரெசிபி!