டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய் குடைமிளகாய் பாகற்காய் புடலங்காய் வாழைக்காய் சுரைக்காய் சௌசௌ காய் போன்ற காய்கறிகளை அதிகமாக நம்முடைய உடம்பில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது அவரைக்காய் சேர்த்து சாம்பார் வைத்தால் வீடு மணக்கும் என்று சொல்வார்கள்.
அந்த வகையில் அவரைக்காய் வைத்து காரக்குழம்பிற்கு சைடிஷ் ஆக வைத்து சாப்பிடும் அளவிற்கு ஒரு சூப்பரான சிம்பிளான அவரைக்காய் பொரியல் பார்க்க போகிறோம். இந்த அவரைக்காய் பொரியல் சாம்பார் புளி குழம்பு எல்லாத்துக்கும் வச்சு சாப்பிட சூப்பரா இருக்கும். ரசம் சாதம் கூட வச்சு சாப்பிடவும் இந்த அவரைக்காய் பொரியல் ரொம்ப டேஸ்ட்டா சூப்பரா இருக்கும். இத செய்வதற்கு நம்ம வீட்டில் இருக்கிற பொருட்கள் மட்டுமே போதுமானது குழந்தைகளுக்கு நல்லா ருசியா செஞ்சு கொடுத்தா அவங்க விரும்பி சாப்பிடுவாங்க இப்ப வாங்க இந்த சூப்பரான அவரைக்காய் பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
அவரைக்காய் பொரியல் | Broad Beans Poriyal In tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ அவரைக்காய்
- 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 2 காய்ந்த மிளகாய்
- 1 கொத்து கருவேப்பிலை
- 1 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 1 பெரிய வெங்காயம்
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- அவரைக்காய் கழுவி சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்
- பிறகு அதில் காய்ந்த மிளகாய் பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும்
- அதில் நறுக்கி வைத்துள்ள அவரைக்காய் சேர்த்து எண்ணெயிலேயே ஐந்து நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும்
- அவரைக்காய் வேக அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு அவரைக்காய் நன்றாக வெந்ததும் இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து இறக்கினால் சுவையான அவரைக்காய் பொரியல் தயார்.