- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast, LUNCH
மொச்சைக் கொட்டையை குருமா ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்,தொட்டுக்கொள்ள ஒரு வத்தல் இருந்தால் போதும். சாதம் மட்டும் அல்லாமல் இட்லி தோசைக்கும் இந்த மொச்சை குருமா அருமையான பக்க உணவா இருக்கும் . பச்சை மொச்சை அல்லது காய்ந்த மொச்சை எதில் வேண்டுமென்றாலும் இந்த ரெசிபியை நீங்க ட்ரை பண்ணி பார்க்கலாம்.
குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் புரதச்சத்து என்பது மிகவும் அவசியமாக இருக்கிறது. அதிலும் வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டால் மட்டுமே அவர்களின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அப்படி பயறு வகைகளில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது.
ஆனால் குழந்தைகள் மொச்சை விரும்பி சாப்பிடுவது கிடையாது. எனவே தினமும் ஒரு பிடி பயிறுவகை குழந்தைகளின் உணவாக இருக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து கொடுத்து வந்தால் அவர்களின் வளர்ச்சி நல்லவிதமாக இருக்கும். அவர்களின் ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குழந்தைகள் வெறும் மொச்சை பயிரை சாப்பிட விரும்பவில்லை என்றால் அவர்களுக்கு கொஞ்சம் மசாலா சுவையில் மொச்சை குருமா செய்து கொடுக்கலாம். அப்படி மொச்சைப் பயறை வைத்து ஒரு சுவையான மொச்சை கறி குருமா ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்
இதையும் படியுங்கள் : கல்யாண வீட்டு கத்திரிக்காய் மொச்சை கூட்டு இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி!
Ingredients
Method
மொச்சையை முதல் நாள் இரவு ,அதாவது சுமார் எட்டு மணிநேரம் ஊறவைக்கவும், பின்னர் ஊர வைத்த மொச்சையைவேக வைத்து எடுக்கவும் .
குக்கரில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்கள் பட்டை, பிரிஞ்சு இலை, சோம்பு சேர்த்து பெரிய விடவும்.பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
தக்காளி சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனைபோனதும் , உருளைகிழங்கு சேர்க்கவும்,சிறிது நேரம் வதக்கவும். அடுப்பை மிதமான தீயில்வைக்கவும்.
தூள் வகைகள் மிளகாய்தூள்,கரம் மசாலா சேர்த்து அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவும்.
வேக வைத்த தண்ணீருடன் மொச்சையை சேர்த்து இன்னும் சிறுது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும். கொத்தமல்லி தூவி இறக்கவும். மொச்சை குருமா தயார்





