- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
தென்னிந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு தின்பண்டம் என்றால் அது வடைதான். ஒவ்வொரு முறை தேநீர் கடையை கடக்கும் போதும் நமது கண்கள் நிச்சயம் வடையைத் தேடும். அந்த அளவிற்கு வடை நம் வாழ்க்கையுடன் பின்னி பிணைந்ததாகும். ஆனால் எப்போதும் ஒரே மாதிரியான வடை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் வடை செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் உங்கள் குழந்தைகள் வடையை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் உள்ளதா? அப்படியானால் அந்த முட்டைக்கோஸ் கொண்டு வடை செய்யுங்கள்.
இந்த முட்டைக்கோஸ் வடை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் வழக்கமாக செய்யும் வடையை விட வித்தியாசமான சுவையில் இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த முட்டைகோஸ் வடை சாப்பிடுவதற்கு சுவையாகவும் செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும் முக்கியமாக இது ஆரோக்கியமானதும் கூட. ஒருமுறை இந்த முட்டைகோஸ் வடையை உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இதை செய்து கொடுங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான முட்டைக்கோஸ் வடை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் முட்டைக்கோஸ் மற்றும் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அதை கொண்டு 15 நிமிடங்களில் சுவையான இந்த பட்டாணி முட்டைகோஸ் சாதம் செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முட்டைக்கோஸ், கொத்தமல்லி, பூண்டு, உப்பு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நாம் கலந்து வைத்துள்ள கலவையை சிறிதளவு எடுத்து வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான முட்டைக்கோஸ் வடை தயார்.




