Home ஆன்மிகம் செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. எதையும் மாற்றி அமைக்கக் கூடிய ஆற்றல் காலத்திற்கும், நேரத்திற்கும் உண்டு என்பார்கள். இதனால் தான் நல்ல காரியங்கள் துவங்குவது முதல், கடன் அடைப்பது, கடன் வாங்குவது, வாகனம் வாங்குவது, சீரமைப்பது, விற்பது என அனைத்தையும் நல்ல நாளில் செய்ய வேண்டும் என்கிறார்கள் நம்முடைய பெரியவர்கள்.

-விளம்பரம்-

சாஸ்திரத்தில் என்ன செய்யக்கூடாது, எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன. காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் நாம் எந்த ஒரு நல்ல செயலைத் தொடங்கினாலும் அது வெற்றி பெறும். தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நம் அன்றாட வேலையை தொடங்கினால் விரைவில் வெற்றிகளைக் குவித்து செல்வந்தராக முடியும் என்பது ஆன்றோர்களின் வாக்கு, இதே போல செவ்வாய் கிழமையில் எந்தெந்த செயலை செய்யாமல் இருந்தால் குடும்பத்திற்கு நல்லது என்பதை இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

செவ்வாய் கிழமை

பொதுவாக ஒவ்வொரு வாரத்திலும் வரும் ஒவ்வொரு கிழமை நாளும் ஒரு கிரகங்களுக்குரியது. அப்படி பார்த்தால் செவ்வாய்க் கிழமையானது செவ்வாய் பகவானுக்கு உரிய நாளாகும். பொதுவாக செவ்வாய்க்கிழமை அன்று எந்த நல்ல காரியங்களை செய்வதற்கோ அல்லது ஆரம்பிப்பதற்கோ உகந்தநாள் இல்லை என்று பலரும் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்தாகும். ஆனால் தெய்வத்திற்கு மிகவும் உகந்த இந்நாளில் செய்யப்படுகின்ற அனைத்து நல்ல காரியங்களும் ஜெயமளிக்கும் என்று நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்திற்கு மங்களன், பூமிகாரகன் என்ற சிறப்பு பெயர்கள் உள்ளன. அதன் பெயரிலேயே மங்களம் உள்ளதால் அந்நாளில் ஆரம்பிக்கும் செயல்கள் சுபமாக நிறைவேறும்.

செவ்வாய் கிழமையில் செய்ய‌ கூடாதவை‌

முடி வெட்டுதல்

முடி எப்பொழுதும் இந்து புராணங்களில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது மற்றும் நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் பெரும் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. நல்ல நேரங்களில் முடி வெட்டுவது நமக்கு மகத்தான பலன்களையும் வெற்றியையும் தரும். அதேபோல், செவ்வாய் கிழமையில் முடி வெட்டுவது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் மற்றும் உங்கள் வாழ்க்கையின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும்.

நகம் வெட்டுதல்

ஜோதிட சாஸ்திரத்தின் படி செவ்வாய் கிழமையில் நகங்களை வெட்டக்கூடாது. இப்படி செய்வதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் பெருகும்.

-விளம்பரம்-

உளுந்தம் பருப்பு உணவுகள்

செவ்வாய் கிழமைகளில் உளுந்தம் பருப்பு சேர்த்து சமைத்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும். இல்லயெனில் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்குவாதம்

செவ்வாய் கிழமை அன்று எந்தவிதமான வாக்குவாதங்களிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது, அப்படி ஈடுபாட்டால் அது தீமையில் வந்துதான் முடியும். இது போன்ற காரணங்களினால் தான் செவ்வாய் கிழமையில் சிலர் விரதம் இருப்பார்கள்.

தேவையில்லாத பொருட்கள்

செவ்வாய் கிழமை அன்று வீட்டில் தேவையில்லாத பொருட்களை தூக்கி போடுவதை தவிர்ப்பது நல்லது. இது போன்ற விஷயங்களை கடைபிடிப்பதால் செல்வம் தானாகவே சேரும், கடன் பிரச்சனை நீங்கும்.

-விளம்பரம்-

கருப்பு நிற ஆடைகள்

செவ்வாய்க்கிழமை அன்று கருப்பு நிற உடைகளை அணியக் கூடாது. செவ்வாய் காரகனுக்கு சிகப்பு நிறம் உகந்த நிறம் என்பதால் சிவப்பு நிற உடைகளை தான் அணிய வேண்டும். அதுமட்டுமல்லாமல் செவ்வாய் கிழமையில் கருப்பு நிறத்தில் ஆடைகளை வாங்கவே கூடாது இது மாங்கல்ய தோஷ வினைகளை ஏற்படுத்தும்.

கடன்

செவ்வாய் கிழமை அன்று கடன் வாங்க கூடாது. ஆனால் வாங்கிய கடனை செவ்வாய் கிழமையில் திரும்ப கொடுத்தால் மொத்த கடனும் விரைவில் அடைபடும். செவ்வாய்க் கிழமையில் செல்வத்தை அதிகம் செலவு செய்ய கூடாது.

அழகு சாதன பொருட்கள்

செவ்வாய் கிழமையில் புதிய பொருட்களை வீட்டிற்கு கொண்டு வரக் கூடாது அதிலும் திருமணம் முடித்தப் பெண்கள் அழகு சாதன பொருட்களை செவ்வாய் கிழமையில் வீட்டிற்கு வாங்கினால் திருமண வாழ்க்கைப் பாதிக்கும்.

செவ்வாய் கிழமையில் என்ன செய்யலாம்?

செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு

செவ்வாய்க்கிழமை அன்று முருகன் கோயிலுக்குச் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வந்தால், நோய் நொடி இல்லாமல் நிறைவான செல்வங்கள் பெற்று வாழ முருகப் பெருமான் அருள் புரிவார். அதிலும், செவ்வாய்க்கிழமை அன்று பிறந்தவர்கள் இதை தொடர்ந்து செய்து வந்தால் அவர்களுக்கு சுகமான வாழ்க்கை கிடைக்கும்.

தானம்

செவ்வாய்க்கிழமை துவரம்பருப்பு தானம் கொடுத்தால் கடன் பிரச்சினை நீங்கி செல்வ செழிப்புடன் வாழ முடியும். குறைந்த பட்சம் 9 வாரங்களுக்காவது துவரம்பருப்பு தானமாக கொடுக்க வேண்டும்.

மெளன விரதம்

செவ்வாய்க்கிழமையன்று மெளனவிரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்தபலனை ஒருவர் அடையலாம் என்கிறது. அதாவது செவ்வாய்க்கிழமையன்று எந்த ஒரு வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. அதனால் தான் செவ்வாய் தினம் வாதம் செய்யாமல் மெளன விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளனர் நம் முன்னோர்கள்.

அனுமன் வழிபாடு

பொதுவாக செவ்வாய் கிழமை அனுமனுக்கு உகந்த நாள் ஆகும். இந்த நாளில் அனுமனுக்கு விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு போட்டு வந்தால் வாழ்க்கை ஒளியும், வளமும் பெருகும் என்பார்கள்.

இதனையும் படியுங்கள் : பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள் வீட்டில் செய்ய கூடாதவைகள்