கொண்டைக்கடலையை வைத்து ஒரு ருசியான தோசை, தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க!
எப்பவும் அரிசி மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? வெள்ளை கொண்டைக் கடலையை வைத்து, இந்த தோசையை சுட்டு பாருங்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்கள் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கொண்டைக்கடலையில் உள்ள மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச் செய்த
எப்பவும் அரிசி மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? வெள்ளை கொண்டைக் கடலையை வைத்து, இந்த தோசையை சுட்டு பாருங்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்கள் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கொண்டைக்கடலையில் உள்ள மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச் செய்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும். இப்போதைய குழந்தைகள் எல்லாம் எதற்கெடுத்தாலும் டயர்டாக இருக்கிறது என்ற வார்த்தையை மட்டும் தவறாமல் கூறி விடுகிறார்கள்.
குழந்தைகளுக்கு நல்ல சத்தான உணவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இப்போதெல்லாம் மிக மிக குறைவு என்றே கூறலாம். முன்பெல்லாம் தானியங்கள் அதிக அளவில் சமைத்து சாப்பிட்டு வந்தோம் வெளி உணவுகள் கிடையாது. ஆனால் இன்று அப்படியெல்லாம் எதுவும் கிடையாது பெரும்பாலும் பிள்ளைகளுக்கு நல்ல சத்தான ஆகாரங்களை கொடுத்தாலே அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்புடனும் இருப்பார்கள் அந்த வகையில் இந்த புரோட்டின் நிறைந்த கொண்டைக்கடலையை தோசை குழந்தைகளுக்கு நல்ல சத்தான உணவு.
வாரத்தில் ஒரு நாளோ அல்லது மாதத்தில் இரண்டு நாட்கள் இந்த கொண்டைக்கடலை தோசையை செய்து கொடுப்பது குடும்பத்தில் இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொண்டைக்கடலை தோசை எப்படி சுடுவது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.