Advertisement
சைவம்

மிகவும் ருசியான சைனீஸ் பெல் இப்படி செய்து ப்ருங்கள்! பிரபலமான சைனீஸ் உணவு!!

Advertisement

சைனாவில் மிகவும் பிரபலமான சைனீஸ் பெல் உணவு அருமையான சுவையுடன் அதிக நறுமணத்துடனும் தயாரிக்கப்படும் நூடுல்ஸ் போன்று தோற்றமளிக்க கூடிய ஒரு உணவு வகையாகும். சீன பெல்லின் இந்த எளிதான செய்முறை அதிக நேரம் எடுக்காது, மேலும் இது உங்கள் விருந்துக்கு சரியான தொடக்கமாக இருக்கும். சைனீஸ் நூடுல்ஸ் செய்வது மிகவும் சுலபம்.

இதனையும் படியுங்கள் : ஜப்பனீஸ் ஸ்டைல்ஸ் நூடுல்ஸ் சூப் எப்படி தாயார் செய்வது ?

Advertisement

இந்தியாவில் அதிக அளவு பிரபலம் இல்லாத இந்த உணவு வகை தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே பரவி வருகிறது. முக்கியமாக வட இந்திய பகுதிகளில் இந்த உணவு வகை தற்போது அதிகம் விரும்பப்படுகிறது. இந்த சிக்கன் ரெசிபியை நீங்கள் வீட்டிலேயே மிக எளிதாக தயாரிக்க முடியும். அதற்கான வழிமுறைகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

சைனீஸ் பெல்| Chinese Bell Recipe in Tamil

Print Recipe
சைனாவில் மிகவும் பிரபலமான சைனீஸ் பெல் உணவு அருமையான சுவையுடன் அதிக நறுமணத்துடனும் தயாரிக்கப்படும் நூடுல்ஸ் போன்று தோற்றமளிக்க கூடிய ஒரு உணவு வகையாகும். சீன பெல்லின் இந்த எளிதான செய்முறை அதிக நேரம் எடுக்காது, மேலும் இது உங்கள் விருந்துக்கு சரியான தொடக்கமாக இருக்கும். ‌ சைனீஸ் நூடுல்ஸ் செய்வது மிகவும் சுலபம். இந்த சைனீஸ் நூடுல்ஸை பேச்சுலர்களும் செய்யலாம். அந்த அளவில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும். இந்தியாவில் அதிக அளவு பிரபலம் இல்லாத இந்த உணவு வகை தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே பரவி வருகிறது.
Course Breakfast, dinner
Cuisine Chinese
Keyword noodles
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Advertisement
Servings 4 People
Calories 316

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Ingredients

  • 2 பாக்கெட் நூடுல்ஸ்
  • 1 கப் முட்டைக்கோஸ்
  • 1 கப் காரட்
  • 1/2 கப் குடைமிளகாய்
  • 1/2 கப் வெங்காயம்
  • 2 டீஸ்பூன் தக்காளி
  • 2 டீஸ்பூன் செஸ்வான் சாஸ்
  • 1 டீஸ்பூன் சோயா
  • 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • எண்ணெய் தேவையானஅளவு
  • 1 சிட்டிகை உப்பு                             
  • வெங்காயத்தாள் சிறிதளவு

Instructions

  • முதலில் நூடுல்சை உதிரியாக வேக விட்டு ஆற விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
    Advertisement
  • முட்டைகோஸ், காரட், குடைமிளகாய் மற்றும் வெங்காயம் ஆகிய காய்களை நீளமாக நறுக்கி வைக்கவும்.
  • அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வேக வைத்த நூடுல்ஸ் எடுத்து போட்டு நன்கு சிவந்து முறுக்கு போல் மொறு மொறுப்பானதும் எண்ணையில் இருந்து எடுத்து விடவும்.
  • பார்வைக்கு ஓமப்பொடி முறுக்கு போல் தோன்றும்.எல்லா வற்றையும் இதே போல் வறுத்து எடுக்கவும்.
  • நூடுல்ஸ் முறுக்கு ஆறின பிறகு கை வைத்து ஓமப்பொடி போல் சிறுதாக உடைத்து விட்டவும்.
  • அடுப்பில் வானலி வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், முட்டைகோஸ், காரட் சேர்த்து வதக்கவும்.
  • குடைமிளகாய் சேர்த்து வதக்கி அரை வேர்க்காடில் வேக விட்டு பிறகு செஸ்வன் சாஸ், டொமட்டோ சாஸ், சோயா சாஸ், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கிளறி விட்டு அடுப்பை ஆப் செய்து விடவும்.
  • கீழே இறக்கி வைத்து அத்துடன் நூடுல்ஸ் முறுக்கு சேர்த்து நன்கு கலந்து, மேல் பொடியாக நறுக்கின வெங்காயதாள் தூவி அலங்கரித்தால் சுவையான சைனீஸ் பெல் தயார்.
  • நன்கு மொறுமொறுப்பாக, அருமையான சுவை மற்றும் நிறத்துடன் இருக்கும் இந்த சைனீஸ் பெல்.

Nutrition

Serving: 500g | Calories: 316kcal | Carbohydrates: 46g | Protein: 12.7g | Fat: 11g | Saturated Fat: 7.6g | Sodium: 159mg | Fiber: 6.4g | Sugar: 3.7g
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

1 மணி நேரம் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

2 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

3 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

4 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

7 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

7 மணி நேரங்கள் ago