Advertisement
சட்னி

புதுவிதமான இந்த தேங்காய் சட்னி செய்து எப்படி ?

Advertisement

எப்போதும் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பொங்கல் என எந்த உணவு செய்தாலும் அதனுடன் நாம் எளிதில் செய்து சாப்பிடக்கூடிய சட்னி என்றால் அது தேங்காய் சட்னி தான் இதை மிக எளிமையாகவும் உடனடியாகவும் செய்து விடலாம். ஆனால் எப்பொழுதும் ஒரே மாதிரியான வகையில் தேங்காய் சட்னி சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் உங்களுக்கே ஒரு கட்டத்தில் சலித்து போய்விடும் ஆனால் இந்த தேங்காய் சட்னியுடன் இன்னும் ஒரு சில பொருட்கள் சேர்த்து அரைத்து சட்னி செய்தால்.

இதையும் படியுங்கள் : கிராமத்து பீர்க்கங்காய் கடையல் சட்னி செய்வது எப்படி ?

Advertisement

அதன் சுவையும் மணவும் சற்று வித்தியாசமாக நன்றாகவே இருக்கும். இப்படி நீங்கள் புதுவிதமாக தேங்காய் சட்னி செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் சற்று வித்தியாசமாக இருக்கும். அதனால் இன்று இந்த தேங்காய் சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

புதுவிதமான தேங்காய் சட்னி | New Coconut Chutney Recipe in Tamil

Print Recipe
ஒரே மாதிரியான வகையில் தேங்காய் சட்னி சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் உங்களுக்கே ஒரு கட்டத்தில் சலித்து போய்விடும் ஆனால் இந்த தேங்காய் சட்னியுடன் இன்னும் ஒரு சில பொருட்கள் சேர்த்து அரைத்து சட்னி செய்தால் அதன் சுவையும் மணவும் சற்று வித்தியாசமாக நன்றாகவே இருக்கும். இப்படி நீங்கள் புதுவிதமாக தேங்காய் சட்னி செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் சற்று வித்தியாசமாக இருக்கும்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword chutney, சட்னி
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 354

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

மிக்ஸயில் அரைக்க

  • ½ மூடி தேங்காய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 பல் பூண்டு
  • 1 கைப்பிடி புதினா
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 துண்டு புளி
  • உப்பு தேவையான அளவு
  • 2 tbsp பொட்டு கடலை

தாளிக்க

  • 1 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு ஊளுந்த பருப்பு
  • 2 வர மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை

Instructions

  • முதலில் ஒரு அரை மூடி தேங்காய் எடுத்துக் கொண்டு உள்ளிருக்கும் தேங்காய்ச் சில்லை கீரி எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
  • பின் நறுக்கிய தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் இரண்டு பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, ஒரு பல் பூண்டு ஒரு துண்டு புளி மற்றும் இரண்டு டீஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து கொரகொரவென அரைத்து கொள்ளுங்கள்.
  • பின் இப்பொழுது இதனுடன் மறுபடியும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி, ஒரு கைப்பிடி புதினா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது தேங்காய் சட்னி ஒரு புதிய பிளேவர் ஆக இருக்கும் பின் இதனுடன் நீங்கள் வழக்கம் போல் ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதனுடன் கருவேப்பிலை மற்றும் இரண்டு வர மிளகாய் சேர்த்து தாளித்து.
  • அந்த தாளிப்பை தேங்காய் சட்னியுடன் சேர்த்து விடுங்கள் அவ்வளவுதான் சுவையான புதிதான தேங்காய் சட்னி இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 300gram | Calories: 354kcal | Carbohydrates: 15g | Protein: 3.3g | Fat: 33g | Saturated Fat: 30g | Sodium: 20mg | Potassium: 356mg | Fiber: 9g | Sugar: 6g

English Overview: coconut chutney is one of the most important dishes in india. coconut chutney recipe or coconut chutney seivathu eppadi or coconut chutney in Tamil are a few important terms to describe this recipe in the tamil language

Advertisement
Prem Kumar

Recent Posts

இந்த வெயிலுக்கு சூப்பரான மசாலா மோர் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து பாருங்க!

இந்த வெயிலுக்கு நமக்கு சாப்பிடணும்  அப்படின்னு கூட தோணாது. நம்ம நினைக்கிறது எல்லாம் எதாவது ஜூஸ் குடிக்கணும் நீராகாரமா ஏதாவது…

1 மணி நேரம் ago

சூப்பரான காய்கறி அவியல் ஈஸியா இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

நாகர்கோவில் கன்னியாகுமரி ஏரியால ரொம்பவே பேமஸ் ஆக இருக்கக்கூடிய ஒரு சூப்பரான சிம்பிளான அவியல் பாக்க போறோம். வீட்ல நிறைய…

2 மணி நேரங்கள் ago

பாலக் கீரை கூட்டு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு கொடுத்தீங்கன்னா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!

வாரத்துக்கு மூணு தடவையாவது நம்ம கீரை சாப்பிட்டால் நம் உடம்புக்கு ஆரோக்கியம் கிடைக்கும் அப்படின்னு எல்லாரும் சொல்லுவாங்க ஆனால் டெய்லி…

4 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதற்கு கிரகங்கள் கூறும் ரகசியம்

அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் வெள்ளி நிச்சயமாக கொஞ்சமாவது வாங்க வேண்டும் என்று பலர் கூற கேட்டிருப்போம் அறிவியல்…

5 மணி நேரங்கள் ago

மக்காச்சோள கார பணியாரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 30 ஏப்ரல் 2024!

மேஷம் இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பல சவால்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்திலும், வேலையிலும் கவனம் செலுத்த வேண்டிய…

10 மணி நேரங்கள் ago