கடன் தீர தேங்காய் தீப பரிகாரம்!!
இந்த உலகில் உள்ள அனைவருக்கும் கடன் பிரச்சினைகளால் பல மன அழுத்தங்கள் ஏற்பட்டிருக்கும். அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியாக திகழக்கூடியவள் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தயார் உடன் சேர்த்து பெருமாளையும் நாம் வழிபடுவதால் நமக்கு இருக்கக்கூடிய கடன்கள் நிவர்த்தியாகும். பெருமாளுடன் கூடிய
இந்த உலகில் உள்ள அனைவருக்கும் கடன் பிரச்சினைகளால் பல மன அழுத்தங்கள் ஏற்பட்டிருக்கும். அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியாக திகழக்கூடியவள் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தயார் உடன் சேர்த்து பெருமாளையும் நாம் வழிபடுவதால் நமக்கு இருக்கக்கூடிய கடன்கள் நிவர்த்தியாகும். பெருமாளுடன் கூடிய மகாலட்சுமியை “லக்ஷ்மி பெருமாள்” என்று கூறுவார்கள் லக்ஷ்மி பெருமாளை நாம் வழிபடுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் தீரும். மேலும் தேங்காய் தீபம் ஏற்றி கடன் பிரச்சினைகளை சரி செய்வதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்
இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு ஒரு முழு தேங்காய் தேவைப்படும் மூன்று கண்கள் தெரியுமாறு சற்று அகலமான தேங்காய் இருக்க வேண்டும், தாமரைத் தண்டு திரி அல்லது பஞ்சு திரி தேவைப்படும், நல்லெண்ணை நல்லது நெய் தேவைப்படும். அனைத்து பொருட்களையும் முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
விளக்கு ஏற்றும் முறை
செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் இந்த விளக்கை வீட்டில் ஏற்றலாம். தேங்காயின் மேல் உள்ள ஒற்றை கண் பகுதியில் கவனமாக ஒரு சிறிய துளை போட்டு உள்ளே உள்ள தண்ணீரை வெளியே ஏற்ற வேண்டும். பிறகு அதற்குள் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி நிரப்ப வேண்டும். திரியை எண்ணெயில் நனைத்து விட்டு அந்த ஒற்றை கண் ஓட்டையில் வைக்க வேண்டும். ஒரு தட்டில் பச்சரிசியை பரப்பி வைத்து அந்த தேங்காயை வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
தீபம் ஏற்றும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம்
லக்ஷ்மி பெருமாள் மட்டுமில்லாமல் துர்க்கை அம்மன் விஷ்ணு பைரவர் போன்ற தெய்வங்களுக்கும் இந்த தீபம் மிகவும் சிறந்தது. தீபத்தை ஏற்றும் போது உங்களுடைய கடன் தொல்லைகள் நீங்க வேண்டும் என வேண்டிக் கொண்டு ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். அல்லது கீழ்கண்ட மந்திரத்தை லட்சுமி குபேரரை நினைத்து லட்சுமி குபேர மந்திரமான இதனை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
லட்சுமி குபேர மந்திரம்
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் சௌம் ஓம் ஹ்ரீம் ஐம் ஐம் ஸ்ரீம் ஸ்ரீம் ஓம்”
தேங்காய் தீபம் ஏற்றும் போது நேர்மறை ஆற்றல் உருவாக்கி கடன் சுமையால் ஏற்பட்ட மன அழுத்தம் குறையும் செல்வ வளம் பெருகும். இதனை மனத்தூய்மையுடனும் ஆழ்ந்த நம்பிக்கையுடனும் முழுமையான பக்தியுடனும் செய்ய வேண்டும். பல தலைமுறைகளாக பின்பற்றப்படும் சக்தி வாய்ந்த பரிகாரம் இது நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : தோஷங்களை நீக்கக் கூடிய தூப பரிகாரம்!!