அடுத்த முறை இறால் வாங்கினால் அதனைக் கொண்டு சுவையான தேங்காய்ப்பால் இறால் கறி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
சிக்கன், மட்டன் போல கடல் உணவுகளையும் விரும்பி உண்ணுபவர்கள் பலர் உள்ளனர். சொல்லப்போனால் மற்ற அசைவ உணவுகளை விட, கடல் உணவான மீனில் தான் பல உடல் நல ஆரோக்கியங்கள் அடங்கியுள்ளது. கடல் உணவுகளில் பெரும்பாலானவர்கள் விரும்பி உண்ணும் முக்கிய உணவு வகை இறால். இது மிகவும் சுவை மிகுந்த உணவாகும்
சிக்கன், மட்டன் போல கடல் உணவுகளையும் விரும்பி உண்ணுபவர்கள் பலர் உள்ளனர். சொல்லப்போனால் மற்ற அசைவ உணவுகளை விட, கடல் உணவான மீனில் தான் பல உடல் நல ஆரோக்கியங்கள் அடங்கியுள்ளது. கடல் உணவுகளில் பெரும்பாலானவர்கள் விரும்பி உண்ணும் முக்கிய உணவு வகை இறால். இது மிகவும் சுவை மிகுந்த உணவாகும். ஆரோக்கியத்திலும் இறால் மற்ற கடல் உணவுகளுக்கு சளைத்ததில்லை. இறாலை அடிக்கடி வாங்கி சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
ஒரு காலத்தில் இறாலை மக்கள் அதிகமாக விரும்பாவிட்டாலும், இப்போது அதற்கான மவுசே தனி தான். ஒரு முறை இறாலை ருசி பார்த்தவர்கள் அதனை கண்டிப்பாக அடிக்கடி உண்ண விரும்புவார்கள். அந்த வகையில் உங்கள் வீட்டில் உள்ளோர் இறாலை விரும்பி சாப்பிடுவார்களா? ஆனால் எப்போதும் ஒரே மாதிரியான ரெசிபியை செய்து போர் அடித்து விட்டதா? கவலைப்பட வேண்டாம். இந்த வார இறுதியில் இறாலை வாங்கி வந்து, அதைக் கொண்டு தேங்காய்ப்பால் கறி செய்து கொடுங்கள்.
இந்த இறால் கறி செய்வது மிகவும் சுலபம். மேலும் இந்த இறால் கறியை சாதம் மற்றும் சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம் ருசியாக இருக்கும். வழக்கமாக செய்கின்ற ரெசிபியை போல் செய்யாமல் இந்த வாரம் ஒரு முறை இப்படி தேங்காய்ப்பால் இறால் கறி செய்து பாருங்கள். அதன் பிறகு வீட்டில் உள்ள அனைவரும் இதனையே அடிக்கடி செய்து தருமாறு அன்பு கட்டளையிடுவார்கள். இப்போது சுவையான தேங்காய்ப்பால் இறால் கறி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஆம்பூர் இறால் பிரியாணி