தேங்காய் பால் சாதம் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு அருமையா இருக்கும்!!

ஒரு சிலருக்கு மசாலா நிறைய போட்டு செய்ற பிரியாணி ரொம்ப பிடிக்கும். பிரியாணிலையே நிறைய வகைகள் இருக்கு சீரக சம்பா பிரியாணி, பாஸ்மதி அரிசி பிரியாணி, தொன்னை பிரியாணி செட்டிநாடு பிரியாணி தலப்பாகட்டி பிரியாணி அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம் அந்த வகையில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரிய

By Prem Kumar · 18/8/2025

ஒரு சிலருக்கு மசாலா நிறைய போட்டு செய்ற பிரியாணி ரொம்ப பிடிக்கும். பிரியாணிலையே நிறைய வகைகள் இருக்கு சீரக சம்பா பிரியாணி, பாஸ்மதி அரிசி பிரியாணி, தொன்னை பிரியாணி செட்டிநாடு பிரியாணி தலப்பாகட்டி பிரியாணி அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம் அந்த வகையில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரியாணியும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனா ஒரு சிலருக்கு மசாலா சேர்த்து செய்ற பிரியாணி சுத்தமா பிடிக்காது. அதுக்கு பதிலா நெய் சோறு தேங்காய் பால் சோறு இது எல்லாமே ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க அந்த மாதிரி நெய் சோறு தேங்காய் பால் சோறு பிரியர்களுக்காகவே இன்னைக்கு நம்ம தேங்காய் பால் சோறு எப்படி செய்வது என்று பார்க்கப் போறோம்.

இந்த தேங்காய் பால் சாதத்துல மசாலா ரொம்ப கம்மியா காரம் ரொம்ப கம்மியா செய்யறது செய்றதால மசாலா போடாம சாப்பிடறவங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இது கூட நல்லா சிக்கன் கிரேவி மட்டன் கிரேவி வச்சு சாப்பிட்டா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஆனா இந்த மாதிரி சாப்பிட பிடிக்காதவங்க உருளைக்கிழங்கு பட்டாணி போட்டு குருமா செஞ்சு அத வச்சு சாப்பிடலாம் காலிஃப்ளவர் குருமா வச்சு சாப்பிடலாம். அசைவ பிரியர்கள் சிக்கன் சாப்பிட்டா சைவ பிரியர்கள் உருளைக்கிழங்கு பட்டாணி காலிஃப்ளவர் இதுல குருமா செஞ்சு சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும்.

இது கூட தயிர் வெங்காயமும் சேர்த்துக்கிட்டா அவ்ளோ சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான ருசியான சூப்பரான தேங்காய்ப்பால் சாதம் ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ்க்கு கொடுத்து விடுங்க காலி பண்ணிட்டு தான் வருவாங்க. தேங்காய் பால் எடுக்கிறது மட்டும் தான் கஷ்டம். மத்தபடி ரொம்ப ரொம்ப ஈஸியா சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். வெங்காயத்தை பொன்னிறமா வதக்கி செஞ்சா டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த சுவையான தேங்காய் பால் சாதம் ரெசிபியை கண்டிப்பா நீங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க இப்ப வாங்க இந்த ருசியான தேங்காய் பால் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : வெயிலுக்கு இதமா குளு குளுனு தேங்காய் பால் மில்க் ஷேக் இப்படி செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full