Advertisement
அசைவம்

ருசியான  தேங்காய் மிளகு நண்டு வறுவல் சுலபமாக இப்படி செய்து அசத்துங்கள்! இதன் ருசியே தனி ருசி தான்!!

Advertisement

அசைவம் விரும்பி உண்ணுபவர்களுக்கு நண்டு என்றால் மிகவும் பிடிக்கும். அதன் சுவை எவ்வளவு அதிகமோ, அவ்வளவு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இதை செய்வதற்கு மிகக் குறைவான நேரமே ஆகும், குளிர்காலத்தில் இதை சாப்பிட்டால் சளி இருமலை வேரோடு வெளியேற்றி விடும். ஒருமுறை தேங்காய் மிளகு நண்டு சாப்பிட்டால், அதன் ருசி தினமும் கேட்கும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த அற்புதமான தேங்காய் மிளகு நண்டு மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேங்காய் மிளகு வறுவல் | Coconut Pepper Crab In Tamil

Print Recipe
அசைவம் விரும்பி உண்ணுபவர்களுக்கு நண்டு என்றால் மிகவும் பிடிக்கும். அதன் சுவை எவ்வளவு அதிகமோ, அவ்வளவு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இதை செய்வதற்கு மிகக் குறைவான நேரமே ஆகும், குளிர்காலத்தில் இதை சாப்பிட்டால் சளி இருமலை வேரோடு வெளியேற்றிவிடும். ஒருமுறைதேங்காய் மிளகு நண்டு சாப்பிட்டால், அதன் ருசி தினமும் கேட்கும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த அற்புதமான தேங்காய் மிளகு நண்டு மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Course Gravy
Cuisine tamilnadu
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 113

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ நண்டு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
  • 1 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • உப்பு தேவைக்கேற்ப
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
    Advertisement

Instructions

  • நண்டைச் சுத்தம் செய்து கழுவி நீரை வடித்து இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவிடவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெறும் வாணலியில் தேங்காய் துருவல், மிளகு இரண்டையும் தனித்தனியாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஊற வைத்த நண்டில் வறுத்த தேங்காய் துருவல், மிளகு சேர்த்து மீண்டும் 10 நிமிடங்கள் ஊறவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி விட்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.
  • பிறகு மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலாத் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் ஊற வைத்த நண்டைச்சேர்த்து பிரட்டவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும். வெந்ததும் கிளறி விட்டு இறக்கவும். சுவையான தேங்காய் மிளகு நண்டு தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 113kcal | Protein: 5g | Fat: 7g | Fiber: 1g | Sugar: 1g
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

2 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

3 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

4 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…

5 மணி நேரங்கள் ago

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

9 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

9 மணி நேரங்கள் ago