எப்பவுமே ஒரே மாதிரி தோசை செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமா மல்லி தோசை ஒருமுறை செஞ்சு பாருங்க!!
வெங்காய தோசை, முட்டை தோசை, பன்னீர் தோசை, காளான் தோசை, பொடி தோசை, மசாலா தோசை அப்படி என்று பல வகையான தோசைகள் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த மல்லி தோசை ரொம்பவே வித்தியாசமா டேஸ்டா இருக்கும். பொதுவா நம்ம எல்லா சமையலிலுமே கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் சேர்த்து செய்வோம் அந்த மாதி
வெங்காய தோசை, முட்டை தோசை, பன்னீர் தோசை, காளான் தோசை, பொடி தோசை, மசாலா தோசை அப்படி என்று பல வகையான தோசைகள் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த மல்லி தோசை ரொம்பவே வித்தியாசமா டேஸ்டா இருக்கும். பொதுவா நம்ம எல்லா சமையலிலுமே கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் சேர்த்து செய்வோம் அந்த மாதிரி செய்யும் போது அது எல்லாத்தையும் எடுத்து தனியா வச்சுட்டு தான் சாப்பிடுவாங்க. ஆனா அதை சேர்த்து சாப்பிடுவதால் உடம்புக்கு தேவையான இரும்பு சத்துக்கள் நிறையவே கிடைக்கும் அதை ஒதுக்கிட்டு சாப்பிடறவங்களுக்காகவே இந்த மாதிரி ஒரு மல்லி தோசை செஞ்சு கொடுங்க.
இதுல கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை புதினா இலைகள் எல்லாமே சேர்த்து செய்றதால டேஸ்ட் ரொம்பவே அற்புதமா இருக்கும். இந்த இலைகளில் இருக்கக்கூடிய சத்துக்கள் எல்லாமே எல்லாருக்கும் தேவையான சத்துக்கள் அதனால இட்லி தோசை மாவுல கலந்து சூப்பரான மல்லி தோசை ஒரு தடவ செஞ்சு பாருங்க. இதுக்கு சைடு டிஷ்ஷா தக்காளி சட்னி தேங்காய் சட்னி சாம்பார் குருமா எது வேணாலும் சாப்பிடலாம் ஆனா தேங்காய் சட்னி சிம்பிளா செஞ்சு சாப்பிட்டாலே அவ்ளோ ருசியா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.
சின்ன குழந்தைகளுக்கு பச்சை கலர் தோசை அப்படின்னு சொல்லி ஏமாத்தி இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்துடுங்க கண்டிப்பா இது அவங்களுக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானதா இருக்கும். நல்ல மொறு மொறுன்னு இந்த தோசையை சுட்டுக் கொடுக்கும் போது எல்லாரும் ரெண்டு தோசை எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். டேஸ்டான இந்த மல்லி தோசை ரெசிப்பி செய்யறதும் ரொம்ப ரொம்ப ஈஸிதான். காலைல டிபனுக்கு நைட் டிபனுக்கு இந்த ரெசிபியை செய்யலாம். இப்ப வாங்க இந்த சுவையான மல்லி தோசை ரெசிப்பி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கொத்தமல்லி உருளைக்கிழங்கு மசாலா