Advertisement
சைவம்

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட சோள பணியாரம் இப்படி வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

விதவிதமான பணியார வகைகளில் இந்த சோள பணியாரம் ரொம்பவே வித்தியாசமானது. சோள  ஏற்கனவே பஞ்சு போல ருசியாக இருக்கக் கூடிய ஒரு பொருளாகும். இதை வைத்து பணியாரம் செய்யும் போது அப்படியே சுவையாக அருமையான ருசியில் இருக்கும். இதை செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. சட்டுனு பத்து நிமிடத்தில் செய்யக் கூடிய இந்த சுவையான சோள பணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். சோளத்தில்

உடலுக்கு தேவையான புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், கொழுப்புச்சத்து, நார்சத்து, மாவுச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, பி-கரோட்டின், தயமின், ரிபோப்ளோவின், நயசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், அஸ்கார்பிக் அமிலம் ஆகியவைகள் இருக்கின்றன.

Advertisement

 வீட்டில் இருப்பவர்களுக்கு பணியாரம் சாப்பிட வேண்டும் என்று ஆசை வரும்.. கடையில் போய் தான் பணியாரம் வாங்கி வர வேண்டும் என்று அவசியம் கிடையாது. உங்க வீட்டில் சோள பணியாரம்  பின் சொல்லக்கூடிய முறையில் செய்து பாருங்கள். சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். சோளம் சேர்த்து நம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்வதால் இதை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் வயிற்றுக்கும் எந்த கெடுதலும் இருக்காது. இந்த செய்முறையில் சோலா மாவை தயார் செய்து,இட்லி தோசை கூட செய்யலாம்.வாருங்கள் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

சோள பணியாரம் | Corn Paniyaaram Recipe In Tamil

Print Recipe
வீட்டில் இருப்பவர்களுக்கு பணியாரம் சாப்பிட வேண்டும் என்று ஆசை வரும்.. கடையில் போய் தான் பணியாரம்வாங்கி வர வேண்டும் என்று அவசியம் கிடையாது. உங்க வீட்டில் சோள பணியாரம்  பின் சொல்லக்கூடிய முறையில் செய்து பாருங்கள். சாப்பிடுவதற்குஅவ்வளவு ருசியாக இருக்கும். சோளம் சேர்த்து நம் வீட்டிலேயே ஆரோக்கியமான
Advertisement
முறையில் செய்வதால்இதை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் வயிற்றுக்கும் எந்த கெடுதலும் இருக்காது. இந்தசெய்முறையில் சோள மாவைதயார் செய்து,இட்லி தோசை கூட செய்யலாம்.வாருங்கள் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Corn Paniyaaram
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 200

Equipment

  • 1 குழி பணியார கல்
  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி (அ) கிரைண்டர்
    Advertisement

Ingredients

  • 1 கப் சோளம்
  • 1/4 கப் உளுந்து
  • 1/4 தேக்கரண்டி வெந்தயம்
  • உப்பு தேவைக்கேற்ப

பணியாரம் செய்ய

  • 1 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை சிறிது
  • 1/4 தேக்கரண்டி கடுகு
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • 1/2 தேக்கரண்டி உளுந்து
  • 1/2 தேக்கரண்டி கடலைப்பருப்பு
  • எண்ணெய் தேவைக்கு

Instructions

  • சோளத்தைச் சுத்தம் செய்து, தன்ணீர் ஊற்றி 4 . 6 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்தையும்சுத்தம் செய்து வெந்தயம் சேர்த்து ஊற வைக்கவும்.
  • வழக்கமாக இட்லிக்கு அரைப்பது போல உளுந்தை அரைத்து எடுத்துக் கொள்ளவும்,சோளத்தை சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
     
  • அரைத்த உளுந்து மாவுடன் சோள மாவைச் சேர்த்து கலந்து கொள்ளவும். அத்துடன் உப்பு சேர்த்து கலந்து 8 – 10 மணி நேரம் வரை புளிக்கவிடவும். மறுநாள் மாவு புளித்து தயாராக இருக்கும்.  வழக்கம் போல இட்லி அல்லது தோசையாக ஊற்றலாம்.
  • பணியாரம் செய்வதற்கு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வதக்கியவற்றை மாவுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
  • (தேவைப்பட்டால் இட்லி சோடா சேர்க்கலாம்). பணியாரக் கல்லை சூடாக்கி, குழியில் துளி எண்ணெய் விட்டு மாவை எடுத்து பணியாரங்களாக ஊற்றவும்.
  • ஒரு பக்கம் சிவந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும், சுவையான சத்தான சோள இட்லி, தோசை மற்றும் பணியாரம் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 200kcal | Carbohydrates: 67g | Protein: 13g | Fat: 0.1g | Sodium: 13mg | Potassium: 274mg | Fiber: 6g
Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

3 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

10 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

21 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

23 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago