அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் ஸ்படிக தாமரை வீட்டின் எந்த திசையில் வைத்தால் நல்லது!
பொதுவாக வாஸ்து பார்க்கும் பழக்கத்தை காலங்காலமாக மக்கள் பின்ற்றி வருகின்றார்கள். வாஸ்து பார்ப்பதினால் நிறைய பலன் கிடைக்கும் என்பது முன்னோர்களின் கருத்து. வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் சில வகை செயல்களை செய்தாலே போதும் நம் வீட்டில் செல்வம் பெருகும், அமைதி நிலவும், குடும்பத்தில் மகிழ்
பொதுவாக வாஸ்து பார்க்கும் பழக்கத்தை காலங்காலமாக மக்கள் பின்ற்றி வருகின்றார்கள். வாஸ்து பார்ப்பதினால் நிறைய பலன் கிடைக்கும் என்பது முன்னோர்களின் கருத்து. வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் சில வகை செயல்களை செய்தாலே போதும் நம் வீட்டில் செல்வம் பெருகும், அமைதி நிலவும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் என நம்பப்படுகிறது. வாஸ்து பார்த்து ஒரு சிறு மாற்றத்தை செய்வதன் மூலம் பெரும் பலனை பெறலாம். ஏனெனில் சிறு சிறு மாற்றங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்து, வீட்டில் செல்வ செழிப்பை உண்டாக்குகிறது. அந்த வகையில் பிரபலமான ஃபெங்ஷுய் வாஸ்து சாஸ்திரத்தின் படி அதிர்ஷ்டம் தரும் ஸ்படிக தாமரை பற்றிய வாஸ்து சார்ந்த தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஸ்படிக தாமரை
ஸ்படிக தாமரை என்பது ஒரு படிகப் பொருளால் செய்யப்பட்ட தாமரைப் பூ வடிவச் சிற்பம் ஆகும். இந்த ஸ்படிக தாமரை, ஃபெங் சுய் மற்றும் வாஸ்து போன்ற முறைகளில் நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதற்கும், அன்பு, தூய்மை, மற்றும் அழகை உருவாக்குவதற்கும், வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஒரு இணக்கமான சூழலை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது சூரிய ஒளியைப் பிடித்து நேர்மறை ஆற்றலை பரப்ப உதவுவதாகக் கருதப்படுகிறது. கண்ணாடி போல ஸ்படிகம், ஒளி பொருந்தியதாக இருப்பதால் ஒளியை கிரகித்து நேர்மறையான ஆற்றல்களை வெளியிடக்கூடிய ஒன்றாக விளங்குகிறது.
வீட்டில் எந்த இடத்தில் ஸ்படிக தாமரையை வைக்க வேண்டும்?
ஃபெங்ஷுய் படி ஸ்படிக தாமரை அன்பு, தூய்மை மற்றும் அழகை குறிக்கின்றது. நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் வரவழைக்க இதனை சரியான இடத்தில் தான் வைக்க வேண்டும். அதன்படி வீட்டின் நுழைவு வாயிலில் ஸ்படிக தாமரையை வைக்கலாம் இதனால் வீட்டில் குடியிருப்பவர்களுக்கு மட்டுமின்றி நம்முடைய வீட்டிற்கு வருபவர்களுக்கும் இது அமைதியான மற்றும் உற்சாகமான உணர்வை அளிக்கும். நம்முடைய வீட்டின் தென்கிழக்கு மூலை அல்லது அலுவகத்தின் தென்கிழக்கு மூலையில் ஸ்படிக தாமரையை வைத்தால் செல்வம் பெருகி நிதி நிலைமை உயரும். படுக்கையறையில் ஸ்படிக தாமரையை வைத்தால் அமைதியான தூக்கம் மற்றும் உறவுகளில் ஒற்றுமை ஏற்படும். ஜன்னல்களின் அருகில் ஸ்படிக தாமரையை வைத்தால் அது சூரிய ஒளியை உள்வாங்கி நம்முடைய வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். குழந்தைகள் இருக்கும் அறையில் இதனை வைப்பதால் குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கமும், அறிவாற்றலும் மேம்படும். வீட்டின் குளியலறை மற்றும் இருள் நிறைந்த இடங்களில் இந்த ஸ்படிக தாமரை வைப்பதை தவிர்க்கவும்.
எந்த நிற ஸ்படிக தாமரையை வீட்டில் வைக்கலாம்?
இந்த ஸ்படிக தாமரை இளஞ்சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள், ஊதா மற்றும் சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல் நிறமற்ற வடிவத்திலும் கிடைக்கிறது. ஒவ்வொரு வண்ணமும், ஒவ்வொரு விதமான ஆற்றல்களை பிரதிபலிக்கும். வெண்மை மனத் தூய்மையையும், ஒளியை ஈர்த்து கிரகித்து நேர்மறை ஆற்றல்களையும் வெளியிடும். இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறங்களில் உள்ள ஸ்படிக தாமரை படுக்கையறையில் வைப்பதால் அமைதி நிலவும். மஞ்சள் ஸ்படிக தாமரை செல்வங்களை ஈர்க்கும்.
வீட்டில் ஸ்படிக தாமரை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
ஃபெங்சுய் என்பது ஒரு பாரம்பரிய சீன வாஸ்து சாஸ்திரமாகும். இந்த சாஸ்திரத்தின் படி சில பொருட்களை நாய் நம்முடைய வீட்டில் வைத்தால் நேர்மறை ஆற்றலைகள் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. அடிக்கடி சூடான வாக்குவாதங்களை சந்திக்கும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த ஸ்படிக தாமரையை வைத்தால் சண்டைகள் குறைந்து அமைதி மற்றும் ஒற்றுமை நிலவும். தொழில் செய்யும் இடத்தில் இந்த தாமரையை வைத்தால் தொழில் வளர்ச்சி அடைந்து வெற்றி பெருகும். வீட்டில் இந்த தாமரை இருந்தால் திருமண வாழ்க்கை மேம்படும் என்று நம்பப்படுகிறது. இந்த ஸ்படிக தாமரை வீட்டில் இருந்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு கவனம் மற்றும் ஒழுக்கம் அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : வாஸ்து பார்த்து வீட்டிற்கு குடியேற வேண்டிய அவசியம்