Advertisement
சைவம்

நாகர் கோவில் வெள்ளரிக்காய் பச்சடி செய்வது எப்படி ?

Advertisement

நாம் சில சமயம் கல்யாண நிகழ்ச்சி போன்ற சில சுப நிகழ்ச்சிகளுக்கு வேறு ஊர்களுக்கு சென்று இருந்தால் சாப்பாட்டு பந்தியில் ஒரு குறிப்பிட்ட கூட்டு வகைகள் அந்த ஊர் பாரம்பரிய முறைப்படி வைத்து வருவார்கள். இது போல் நிறைய ஊர்களில் இது போன்ற அந்த ஊர்களுக்கு என பிரசித்தி பெற்ற தனி கூட்ட வகைகள் உள்ளது அந்த வகையில் இன்று நாம் நாகர்கோவில் பிரபலமான வெள்ளரிக்காய் பச்சடி பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

இதையும் படியுங்கள் : உடல் எடையை வேகமாக குறைக்கும் காலிஃபிளவர் பொரியல் செய்வது எப்படி ?

Advertisement

ஆம் மிகவும் அருமையான முறையில் செய்யும் இந்த சுவையான வெள்ளரிக்காய் பச்சடியை ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சமைத்து கொடுத்தால் பின் அடிக்கடி உங்களை செய்து தர சொல்லி வற்புறத்துவார்கள். அந்த அளவுக்கு இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். இன்று இந்த நாகர்கோவில் வெள்ளரிக்காய் பச்சடி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பு நம் காணலாம் வாருங்கள்.

வெள்ளரிக்காய் கூட்டு | Cucumber Kottu Recipe in Tamil

Advertisement
Print Recipe
இன்று நாம் நாகர்கோவில் பிரபலமான வெள்ளரிக்காய் பச்சடி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம் மிகவும் அருமையான முறையில் செய்யும் இந்த சுவையான வெள்ளரிக்காய் பச்சடியை ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சமைத்து கொடுத்தால் பின் அடிக்கடி உங்களை செய்து தர சொல்லி வற்புறத்துவார்கள். அந்த அளவுக்கு இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். இன்று இந்த நாகர்கோவில் வெள்ளரிக்காய் பச்சடி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பு நம் காணலாம் வாருங்கள்.
Course Kootu
Cuisine Indian, TAMIL
Keyword Cucumber kootu, வெள்ளரிக்காய் கூட்டு
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 30

Equipment

  • 2 கடாய்
  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 வெள்ளரிக்காய் பெரியளவு
  • ½ கப் துருவிய தேங்காய்
  • 2 துண்டு இஞ்சி
  • 3 பச்சை மிளகாய்
  • ½ tbsp சீரகம்
  • 1 கப் புளிப்பான தயிர்
  • உப்பு தேவையான அளவு
  • 1 tbsp எண்ணெய்
  • ¼ tbsp கடுகு
  • ½ tbsp உளுந்த பருப்பு
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை

Instructions

  • முதலில் ஒரு பெரிய அளவிலான வெள்ளரிக்காயை எடுத்து அதன் மேற் புற தோல்களை நன்கு சீவிக் கொள்ளுங்கள். அதன் பின்பு வெள்ளரிக்காயை நீள்வாக்கில் பாதியாக வெட்டி அதன் உள்ள விதைகளை நீக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்பு சிறிய துண்டுகளாக வெள்ளரிக்காயை நறுக்கி நறுக்கிக் கொள்ளவும்.
  • பின்பு ஒரு குழம்பு
    Advertisement
    பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நாம் நறுக்கிய வெள்ளரிக்காயை சேர்த்து சிறிது அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் துருவிய தேங்காய், இரண்டு துண்டு இஞ்சி, மூன்று பச்சை மிளகாய் மற்றும் அரை டீஸ்பூன் அளவு சீரகம் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு வெள்ளரிக்காய் நன்கு வெந்ததும் அதனுடன் நாம் கெட்டியாக அரைத்த தேங்காய் பேஸ்ட்டையும் சேர்த்து நன்றாக கிளறி விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு கப் புளிப்பான தயிர் சேர்த்து நான்கு கிளறி விட்டுக் கொள்ளுங்கள்.
  • அதன் பின் கடாயை இறக்கி வைத்து விட்டு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான நாகர்கோவில் வெள்ளரிக்காய் பச்சடி இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 4person | Calories: 30kcal | Carbohydrates: 3.63g | Protein: 0.65g | Fat: 0.11g | Potassium: 147mg | Calcium: 16mg | Iron: 0.28mg

English Overview: cucumber kootu is one of the most important dishes in india. cucumber kootu recipe or cucumber kootu seivathu eppadi or cucumber kootu recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Advertisement
Prem Kumar

Recent Posts

வீட்டில் முட்டைக்கோஸ் மற்றும் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அதை கொண்டு 15 நிமிடங்களில் சுவையான இந்த பட்டாணி முட்டைகோஸ் சாதம் செய்து பாருங்கள்!!

பொதுவாக முட்டைக்கோஸ் சாதம் என்றால் பலருக்கும் ஹோட்டலில் சாப்பிட தான் பிடிக்கும். ஏனென்றால் அதன் சுவையே தனி. வீட்டில் செய்தால்…

19 நிமிடங்கள் ago

2024 அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் பணம் அதிகமாக சேர்வதற்கு அதிர்ஷ்டம் உள்ள சில ராசிகள்

இந்த ஆண்டு அட்சய திருதியை மே பத்தாம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய…

2 மணி நேரங்கள் ago

2 பீட்ரூட் இருந்தால் போதும் சூப்பரான மில்க் ஷேக் இப்படி வீட்டிலே சுலபமாக செய்து பாருங்க!

பெண்களை பொறுத்த வரையில் நாள் முழுவதும் வீட்டு வேலை செய்து நிச்சயமாக அலுத்து போய் விடுவார்கள். அதற்காக  வேலைகளை செய்யாமலும்…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 06 மே 2024!

மேஷம் கடன் வாங்குவது, கடன் கொடுப்பதை தவிர்க்கவும். கடன் கேட்பவர்களுக்கு கடன் வழங்குவதற்கு முன் அவர்களின் நம்பகத்தன்மையை அறிந்திடுங்கள். உங்களின்…

5 மணி நேரங்கள் ago

ருசியான குதிரைவாலி தக்காளி தோசை இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

உடல் எடையை குறைக்க வேண்டும். அரிசியை உணவோடு சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று நினைப்பவர்கள், ஆரோக்கியம் மிக முக்கியம் என்று நினைப்பவர்கள்,…

5 மணி நேரங்கள் ago

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

18 மணி நேரங்கள் ago